Kvb Bank Home Loan Interest Rate
வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. இதற்காக பணத்தை சேமித்து வைக்கிறார்கள். சேமித்து வைத்த பணத்தில் வீடு கட்ட ஆரம்பித்தாலும் கட்டும் போதே செலவு கூட ஆகின்றது. வீடு கட்டுவதற்காக கடன் தான் வாங்குகின்றோம். உங்களுக்காக வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் வீட்டு கடன். இந்த கடனை பெறுவதற்கு முன் அதற்கான வட்டி மற்றும் தகுதிகள் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வகையான வட்டிகளை வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் KVB வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு வட்டிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
KVB வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு தகுதிகள்:
தகுதி:
வீட்டு கடன் பெறுவதற்கு 23 வயது முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இந்த கடனில் பயன் அடையலாம்.
வட்டி:
வீட்டு கடன் பெறுவதற்கு 7.45% முதல் 9.55% வரை வட்டி வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
வீட்டு கடன் வாங்கிய தொகைக்கு 1 முதல் 25 ஆண்டுகள் கால அளவு கொடுக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
- அடையாள அட்டை
- முகவரி அட்டை
- கடந்த 6 மாதங்களுக்கான சம்பள அட்டை
- சொத்து தொடர்பான ஆதாரம்
Kvb வங்கியில் 5 லட்சம் வீட்டு கடன் வாங்குகிறீர்கள் என்றால் emi தொகை எவ்வளவு:
நீங்கள் kvb வங்கியில் 5 லட்சம் வீட்டு கடன் வாங்குகிறீர்கள் என்றால் இதற்கு வட்டியாக 7.45% வசூலிக்கப்படுகிறது.
இதற்கு நீங்கள் EMI தொகையாக மாதந்தோறும் 10,001 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். மொத்த வட்டி தொகையாக 1,00,426 ரூபாய் கடனுக்கான வட்டி தொகையாக செலுத்த வேண்டும்.
அசல் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 6,00,426 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
நீங்கள் வாங்கிய கடன் தொகை மற்றும் கால அளவை பொறுத்து EMI தொகை மாறுபடும்.
2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா
என்ன சொல்லுறீங்க மாதம் 2,000 ரூபாய் மட்டுமே செலுத்தி 3,24,412 ரூபாய் வரை பெறலாமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |