444 நாளில் ரூ.1.01 லட்சம் வட்டி தரும் அசத்தலான சேமிப்பு திட்டம்..!

KVB Bank Spl fixed Deposit Interest

444 நாளில் ரூ.1.01 லட்சம் வட்டி தரும் அசத்தலான சேமிப்பு திட்டம்..! KVB Bank Spl fixed Deposit Interest..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது கரூர் வைசியா வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் ஸ்கீமை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ஸ்பெஷல் FD-க்கு என்ன வட்டி வழங்குகிறார்கள், எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும். யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணையலாம் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

KVB Bank Spl fixed Deposit:

பொதுவாக நாம் இந்த சேமிப்பு திட்டத்தில் லம்சமாக ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தோம் என்றால், அதற்கான வட்டி குறிப்பிட்ட நாட்களுக்கு நமக்கு லாபகரமாக கிடைக்கும். பிக்சட் டெபாசிட்டிற்கு வங்கிகளில் 7 நாட்களில் இருந்து 10 வருடங்கள் வரை கிடைக்கும்.  இருப்பினும் ஒருசில வங்கிகளில் ஸ்பெஷல் FD என்பது இருக்கும் அந்த ஸ்பெஷல் FD குறிப்பிட்ட நேரத்திலேயே அதிக வட்டி தரக்கூடியதாக இருக்கும். ஆக நம்மிடம் ஒரு பெரிய தொகை உள்ளது. அந்த தொகை இப்போதைக்கு செலவு செய்ய தேவைப்படாது இருப்பினும் அவற்றில் இருந்து நிறைய வட்டி கிடைக்க வேண்டும் என்றால் அந்த தொகையை வீட்டிலோ அல்லது சேமிப்பு கணக்கிலோ வைக்காமல். இது போன்ற ஸ்பெஷல் FD-யில் முதலீடு செய்வதன் மூலம் நமக்கு கூடுதலாக வட்டி கிடைக்கும்.

இஹையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
HDFC வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஓர் நற்செய்தி..!

இதன் காரணமாக தான் நிறைய வகையான ஸ்பெஷல் FD-க்கு மக்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான வட்டிகளை வழங்குகின்றன. அந்த வகையில் இந்த கரூர் வைசியா வங்கியின் ஸ்பெஷல் 444 பிக்சட் டெபாசிட் ஸ்கீமில் எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்பது குறித்து இபோழுது நாம் பார்க்கலாம் வாங்க.

டெபாசிட் காலம்:

இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் ஸ்கீமின் டெபாசிட் காலம் 444 நாட்கள் மட்டுமே.

டெபாசிட் அமௌன்ட்:

இந்த திட்டத்தில் நீங்கள் குரைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொது பிரிவினர்களை விட கொஞ்சம் கூடுதலாக இந்த திட்டத்தில் வட்டி கிடைக்கும்.

மேலும் இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் நாமினிகளை தேர்வு செய்துகொள்ளலாம். அதேபோல் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு தகுந்தது போல் Loan Facility-ம் நமக்கு கிடைக்கும்.

எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது:

டெபாசிட் காலம் பொது பிரிவினர்  60 வயது நிரம்பியவர்களுக்கு 
444 நாட்கள் 7.50% 8.00%

இந்த வட்டியை நீங்கள் உங்களது மெச்சுரிட்டி காலத்தின் போது வாங்கினால் அதிக வட்டி கிடைக்கும்.

எவ்வளவு டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

முதலீட்டு தொகை பொது பிரிவினர்  60 வயது நிரம்பியவர்களுக்கு 
10,000 945 1011
50,000 4729 5057
1,00,000 9459 10,114
5,00,000 47299 10,574
10,00,000 94,599 1,01,149

 

இஹையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking