KVB Gold Loan Interest Rates in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே அதிக அளவு கடமைகள் உள்ளது. அதாவது சொந்தமாக வீடு வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும், பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் போன்ற பல கடமைகள் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அவையாவையும் நிறைவேற்றுவதற்கு முக்கியமாக நமக்கு தேவைப்படுவது அதிக அளவு பணம் தான். அதனால் நிமிடம் உள்ள அனைத்து சேமிப்பினையும் நமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக நாம் செலவழித்துவிடுவோம். அவ்வாறு நம்மிடம் உள்ள அனைத்து சேமிப்புகளும் செலவு செய்த பிறகும் நமது பணத்தேவை தீரவில்லை என்றால் நாம் யாரிடமாவது சென்று கடன் வாங்குவோம். அவ்வாறு நாம் யாரிடமாவது சென்று கடன் வாங்குவதை விட நாமே நமது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். அதாவது இன்றைய சூழலில் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் நமக்காக வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன், தங்கநகை கடன் என பலவகையான கடன்களை அளிக்கின்றது இதில் ஏதாவது ஒன்றை பெற்று நமது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். அதனால் தான் இன்றைய பதிவில் KVB வங்கியில் நகை கடன் பெற்றால் எவ்வளவு வட்டிவிகிதம் மற்றும் எவ்வளவு EMI கட்டவேண்டும் போன்ற தகவல்களை பதிவிட்டுளோம். எனவே இந்த பதிவை விரிவாக படித்து பயன் பெற்றுக்கொள்ளுங்கள்.
KVB Gold Loan Interest Rates in Tamil:
வட்டிவிகிதம் | 9.80% முதல் 10.75% |
கடன் தொகை | 5,000 ரூபாய் முதல் 2 கோடி வரை அளிக்கப்படும். |
கடன் பெறுவதற்கான வயது வரம்பு | 18 வயது முதல் 75 வயது வரை |
கடன் திருப்பி செலுத்தும் காலவரம்பு | 1 வருடம் காலம் |
செயலாக்கக் கட்டணம் | இல்லை |
KVB வங்கியில் 1,00,000 ரூபாய் நகை கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI தொகை:
எடுத்துக்காட்டாக, நீங்கள் KVB வங்கியில் 1 வருட கால அளவை தேர்வு செய்து 1 லட்சம் ரூபாய் நகை கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி தொகை, மாதம் கட்ட வேண்டிய EMI தொகை உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
கடன் தொகை: 1,00,000
வட்டி எவ்வளவு: 9.80%
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்: 1 ஆண்டு
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்: 8,782 ரூபாய்
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு: 5,388 ரூபாய்
நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு: 1,05,384 ரூபாய்
என்ன சொல்லுறீங்க மாதம் 2,000 ரூபாய் மட்டுமே செலுத்தி 3,24,412 ரூபாய் வரை பெறலாமா
Canara வங்கியில் 1 லட்சம் செலுத்தினால் 2,04,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |