KVB RD Interest in Tamil
இன்றைய சூழலில் பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை என்பது தான் கசப்பான உண்மை. அதனால் அனைவருமே தங்களிடம் அதிக அளவு பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளார்கள். அதனால் அனைவரும் ஓடி ஓடி கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறார்கள். அப்படியெல்லாம் சம்பாதித்தும் எந்த ஒரு பயனும் இல்லாமல் தான் போகின்றது. ஏனென்றால் நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதனை நாம் எப்படி சேமிக்கின்றோம் என்பதில் தான் உள்ளது. இன்றும் ஒரு சிலருக்கு நாம் எவ்வாறு சேமித்தால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதில் குழப்பம் உள்ளது. அதனால் தான் இன்று KVB வங்கியின் RD திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து KVB வங்கியின் RD திட்டத்தில் எப்படி சேமிப்பது எவ்வளவு சேமித்தால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ளுவோம் வாங்க..
KVB RD Interest Rates in Tamil:
இந்த KVB வங்கியின் RD திட்டத்தில் நீங்கள் மாதமாதம் 100 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். அதேபோல் இந்த திட்டத்தில் 6 மாதம் முதல் 120 மாதங்கள் (10 வருடங்கள்) வரை சேமிக்கலாம்.
அதேபோல் நீங்கள் எவ்வளவு காலம் சேமிக்கின்றிர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கு அளிக்கப்படும் வட்டிவிகிதம் மாறுபடும். காலத்தை பொறுத்து எவ்வளவு வட்டிவிகிதம் கிடைக்கும் என்பதை விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
2 லட்சம் செலுத்தினால் 2,85,049 ரூபாய் வரை கிடைக்கக்கூடிய சூப்பரான சேமிப்பு திட்டம்
ஆயுட்காலம் | வட்டிவிகிதம் |
181 நாட்கள் – 270 நாட்கள் | 4.75% |
271 நாட்கள் – 1 வருடத்திற்கும் குறைவான காலம் | 5.00% |
1 வருடம் – 2 வருடங்களுக்கும் குறைவான காலம் | 5.50% |
2 ஆண்டுகள் – 3 ஆண்டுகளுக்கு குறைவான காலம் | 5.50% |
3 ஆண்டுகள் – 5 ஆண்டுகளுக்கு குறைவான காலம் | 5.65% |
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் உள்ள காலம் | 5.75% |
KVB வங்கியின் RD திட்டத்தில் மாதமாதம் 2,000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை கிடைக்கும்:
மேலே உள்ள அட்டவணையின் படி நாம் KVB வங்கியின் RD திட்டத்தில் 10 வருடங்களுக்கு மாதமாதம் 2,000 ரூபாய்யை செலுத்துகிறோம் என்றால் நமக்கு 10 வருட முடிவில் 84,412 ரூபாய் வரை வட்டியாக கிடைக்கும்.
மேலும் 10 வருட முடிவில் 324,412 ரூபாய் வரை முதிர்வு தொகை கிடைக்கும்.
1,17,152 வட்டியாக மட்டும் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்
Canara வங்கியில் 1 லட்சம் செலுத்தினால் 2,04,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |