தனிநபர் கடனுக்கு வட்டி எவ்வளவு? கவனிக்க வேண்டியது என்ன?

Advertisement

Personal Loan Interest

நிதிநிலையில் நெருக்கடி ஏற்படும்பொழுது அதனை எதிர்கொள்வது அனைவரது இயல்பு. அத்தகைய நாட்களில் நிதி நிலை பற்றாக்குறையை சரி செய்ய என்ன செய்யலாம் என்று பல யோசனை இருக்கும். அவற்றில் சிலர் தேர்வு செய்வது தனி நபர் கடன் ஆகும். இந்த தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பொதுவாக வீடு கட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, மருத்துவ செலவுக்கு, கல்வி என பலவகையான விஷயங்களுக்கு தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. இத்தகைய தனிநபர் கடன் பெறுவதற்கு நீங்கள் எந்த விதமான சொத்தையோ அல்லது பொருளையோ அடமானம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த பெறுவதற்கு வங்கிகள் அல்லது வங்கி சார்ந்த நிதி நிறுவனங்கள் கேட்கும் சிபில் ஸ்கோரை நீங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI வங்கியில் பைக் கடன் பெற்றால் குறைவான வட்டியா..?

வட்டி எவ்வளவு? – Personal Loan Interest

ஏதோ ஒரு தேவைக்காக ஒருவர் 1 லட்சம் ரூபாய் கடன் பெறுகிறார், வாங்கிய கடனை 3 ஆண்டுக்குள் செலுத்துவர் என்று வைத்துக்கொள்வோம். வாங்கிய கடன் 1 லட்சம் ரூபாய்க்கு 14% வட்டியாக மாதந்தோறும் 3418 ரூபாய் செலுத்தி வந்தால் மூன்று ஆண்டில் அவர் வட்டியாக செலுத்திய தொகை 23048 ரூபாய் மற்றும் கடனாக வாங்கிய தொகை 1 லட்சமாக 1,23,048/- திரும்பி செலுத்த வேண்டியதாக இருக்கும்.

தனிநபர் கடன் பெற வேண்டும் என்று எண்ணுபவர் முதலில் வங்கிகள் அல்லது நிதிநிறுவனங்களின் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும்.

நன்பகத் தன்மையுள்ள நிதிநிறுவனங்களில் மட்டுமே கடன் பெற வேண்டும்.

அதேபோல் பெற்ற கடனுக்கு தவணையை முறையாக செலுத்திவர வேண்டும். அப்பொழுது தான் கடன் பெறுவதற்கின சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாமல் இருக்கும்.

சந்தைகளில் பலவகைகளில் கடன் கிடைக்கின்றன பல்வேறு காரணங்களுக்காக கடன் தரலாம், ஆனால் கடனாக பெறப்படும் பணம் வருமணமாகாது என்றும் வட்டியுடன் கூடுதல் தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியன் வங்கியில் 1 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும் மற்றும் வட்டி எவ்வளவு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement