Personal Loan VS Loan Against Securities Interest Rate in Tamil
வாசகர்களே வணக்கம்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். எல்லாருமே வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது அல்லவா..! நமக்கு ஏதாவது பணக்கஷ்டம் என்றால் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் வாங்கி கொள்ளலாம். அதுவே பெரிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் நாம் எங்கு செல்வது. ஆனால் நமக்கு உதவும் வகையில் தான் அனைத்து வங்கிகளும் இருக்கின்றன. அனைத்து வங்கிகளும் பலவகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் ஒவ்வொரு வங்கியிலும் தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடன் எதில் வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ICICI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள் அப்போ இந்த முக்கிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா |
தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடன் எதில் வட்டி அதிகம்..!
ஒருவருக்கு பணத்தேவை ஏற்படும் போது தனிநபர் கடன் வாங்கலாமா அல்லது அடமானக் கடன் வாங்கலாமா என்ற எண்ணம் தோன்றும். அப்படி தோன்றுவதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் இவை இரண்டிற்கும் வெவ்வேறு வட்டிகள் வழங்கப்படுகின்றன.
தனிநபர் கடன்: நாம் வங்கியில் தனிநபர் கடன் வாங்கினால் அதை 1 முதல் 5 ஆண்டுகளுக்கு திருப்பி செலுத்த வேண்டும். அதுபோல தனிநபர் கடன் 16 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.
அடமானக் கடன்: அடமானக் கடன் என்பது தங்கம், பத்திரம் போன்றவற்றை அடமான வைத்து பெறப்படும் கடன் ஆகும். சில நேரங்களில் FD, LIC போன்ற முதலீடுகள் மீதும் இந்த அடமான கடன்கள் கொடுக்கப்படுகின்றன. அதுபோல அடமானக் கடனில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே வட்டி வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபிஸ் FD Vs வங்கி FD இரண்டில் வட்டி எதில் அதிகம் தெரியுமா |
இதை வைத்து பார்க்கும் போது தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடன் இரண்டுமே வேறு என்று தெரிகிறது. அதுபோல தான் இதில் வழங்கும் வட்டி விகிதங்களும். அதாவது இவை இரண்டிற்குமே தனித்தனியான வட்டி வழங்கப்படுகிறது. அதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடனின் வட்டி விகிதங்களை பார்க்கலாம் வாங்க..!
வங்கி | தனிநபர் கடன் | அடமானக் கடன் |
SBI | 11.00 | 11.00 |
Indian Bank | 10.90 | 10.95 |
IDBI Bank | 11.00 | 10.10 |
Canara Bank | 13.60 | 14.75 |
Indian Overseas Bank | 12.50 | 12.80 |
Kotak Bank | 10.25 | 8.50 |
Axis Bank | 10.49 | 9.99 |
Bank of Baroda | 10.90 | 10.90 |
Karur Vysya Bank | 12.50 | 10.50 |
ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சத்திற்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |