1 லட்சம் ரூபாய் தபால் துறையில் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் கட்டினால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு அசல் கிடைக்கும்..?

Advertisement

Post Office 1 Lakh SCSS Scheme Calculator 2023 

நம்மிடம் எப்போதும் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணத்தினை எப்படி சேமிப்பது என்று குறித்து குழப்பமானது இருந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் இவ்வாறு நாம் முதலீடு செய்து வருவதனால் நமக்கான தேவையினை பூர்த்தி செய்வதற்கு பிறர் யாரிடம் உதவி கேட்காமல் வாழலாம் என்பது அடிப்படையான ஒன்று. இத்தகைய கருத்து ஆனது நியாயமானதாக இருந்தாலும் கூட எந்த திட்டம் நமக்கு ஏற்றதாக இருக்கும் என்பது பற்றி தெளிவாக தெரியாது. அந்த வகையில் பார்த்தால் மூத்த குடிமக்களுக்கு என்று உள்ள ஒரு திட்டம் தான் சீனியர் சிட்டிசன் திட்டம் ஆகும். இத்தகைய திட்டம் ஆனது வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் என இரண்டிலும் உள்ளது. அந்த வகையில் இன்று ஒரு உதாரணத்திற்கு போஸ்ட் ஆபீசில் உள்ள சீனியர் சிட்டிசன் திட்டத்தில் ஒரு நபர் 1,00,000 ரூபாயினை டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

தபால் துறையில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் இந்திய குடிமக்கள் 60 வயதிற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

குறைந்தபட்ச சேமிப்பு தொகை  அதிகப்பட்ச சேமிப்பு தொகை  வட்டி விகிதம்  முதிர்வு காலம் 
1,000 ரூபாய்  30,00,000 ரூபாய்  8.2% 5 வருடம்

 

மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது உங்களுக்கு என்ன வட்டி விகிதம் அளிக்கப்படுகிறதோ, அதே வட்டி விகிதம் தான் 5 வருடமும் வழங்கப்படும்.

ஒருவேளை 5 வருடம் நிறைவடைந்த பிறகு மேலும் இதே கணக்கினை நீங்கள் தொடர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் உங்களுக்கு 3 வருடம் அளிக்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • வாக்காளர் அட்டை
  • பாஸ்போர்ட்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • தொலைபேசி

மேலே சொல்லப்பட்டுள்ளது அனைத்தும் அவசியமானததாக கருதப்படுவதால் இவை அனைத்தினையும் போஸ்ட் ஆபீஸிற்கு எடுத்து செல்லுங்கள்.

1 லட்சம் செலுத்தினால் எவ்வளவு மற்றும் அசல் தொகை கிடைக்கும்:

எடுத்துக்காட்டாக:

சேமிப்பு தொகை: 1,00,000 ரூபாய்

வட்டி விகிதம்: 8.2%

முதிர்வு காலம்: 5 ஆண்டு 

மொத்த வட்டி தொகை: 41,000 ரூபாய் 

3 மாத வட்டி தொகை: 2,050 ரூபாய் 

அசல் தொகை: 1,41,000 ரூபாய் 

குறிப்பு: இதில் நீங்கள் சேமிக்கும் தொகையினை பொறுத்து தான் வட்டி மற்றும் அசல் தொகையானது அமையும்.

இதையும் படியுங்கள்👇 👇

தபால் துறையில் மாதம் 500 ரூபாய் RD திட்டத்தில் கட்டினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு 

இந்தியன் வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement