தபால் துறையில் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

2 Lakh Post Office Senior Citizen Saving Scheme Calculator

பொதுவாக நாம் அனைவருக்குமே பணத்தை அதிகமாக சேமிக்க வில்லை என்றாலும் கூட நம்மால் முடிந்த தொகையினை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் இவ்வாறு நினைப்பவர்களில் பாதி நபர்களே எதிர்கால தேவையினை அறிந்து பணத்தினை சேமித்து வைக்கிறார்கள். இத்தகைய சேமிப்பு தொகையினையும் பெருபாலான நபர்கள் போஸ்ட் ஆபீசில் உள்ள திட்டத்தில் தான் சேமிக்க வேண்டும் என்று விருப்புகிறார்கள். ஏனென்றால் மற்ற நிதி நிறுவனத்துடன் ஒப்பிடும் போது அதிகமான வட்டியினையும், நன்மையினையும் அளிப்பதால் மக்கள் இதையே விரும்புகீறார்கள். ஆனால் இதில் அவர்களுக்கு தெரியாத சில விஷயங்களும் இருக்கிறது. அதாவது ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்து சேமிக்கிறார்கள் என்றால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதில் கிடைக்கும் அசல் தொகை மற்றும் வட்டி தொகை எவ்வளவு என்று தெரிவது இல்லை. அதனால் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 5 வருட கால அளவில் 2 லட்சம் ரூபாயினை டெபாசிட் செய்தால் கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Senior Citizen Savings Scheme Post Office 2 Lakh Calculator:

post office scss scheme calculator in tamil

வயது தளர்வு:

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தில் 60 வயதிற்கு மேல் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம்.

டெபாசிட் தொகை:

இத்தகைய திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை என்பது 30 லட்சம் ரூபாய் ஆகும். இதில் நீங்கள் டெபாசிட் செய்யும் முன்பே உங்களுக்கான தொகையினை தீர்மானித்து கொள்ள வேண்டும்.

வட்டி தொகை:

போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கு மொத்த வட்டி தொகையாக 8.2% வரை வழங்கபடுகிறது.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்து டெபாசிட் செய்தால் உங்களுக்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். அதுவே மேலும் இதே திட்டத்தில் பயனடைய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.

மேலும் 3 வருடம் சேமிக்கலாம்.

Post Office SCSS Scheme Calculator:

டெபாசிட் தொகை 2,00,000 ரூபாய்
வட்டி விகிதம் 8.2%
3 மாதத்திற்கான வட்டி தொகை 4,100 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 82,000 ரூபாய்
முதிர்வு கால அசல் தொகை 2,82,000 ரூபாய் 

 

குறிப்பு: உங்களுடைய டெபாசிட் தொகையினை பொறுத்து வட்டி தொகை மற்றும் அசல் தொகை ஆனது மாறுபடும்.

இதையும் படியுங்கள்👇 👇

போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா 

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement