Post Office 1yr FD Interest Rate
நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு சேமிப்பு இடங்கள் உள்ளது. அதாவது, போஸ்ட் ஆபீஸ், வங்கி மற்றும் பிற சேமிப்பு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து சேமிக்க தொடங்குவோம். சேமிப்பதற்கு எப்படி அதிக வழிகள் உள்ளதோ அதேபோல் சேமிக்கும் வகையும் அதிகமாக உள்ளது. அதில் பெரும்பாலும் நாம் தேர்வு செய்வது அல்லது தெரிந்தது FD மற்றும் RD டெபாசிட் திட்டம் தான். எனவே அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் நீங்கள் சேமிக்க விரும்பினால் அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு என்பதை எடுத்துக்காட்டுடன் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office 1 Year FD Interest Rate Calculator in Tamil:
வட்டி விகிதம்:
போஸ்ட் ஆபீஸ் பிக்ஸடு டெபாசிட் திட்டத்திற்கு (FD) ஆண்டு வட்டி விகிதமாக 6.90% முதல் 7.50% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
மேலும், நீங்கள் செலுத்தப்படும் டெபாசிட் தொகையையும், நீங்கள் தேர்வு செய்யும் கால அளவையும் பொறுத்து உங்களுக்கு வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. அதனை பற்றிய விவரங்கள் பின்வருமாறு,
டெபாசிட் கால அளவு | வட்டி விகிதம் (ஆண்டு) |
1 வருடம் | 6.90% |
2 வருடம் | 7.00% |
3 வருடம் | 7.00% |
5 வருடம் | 7.50% |
டெபாசிட் தொகை:
போஸ்ட் ஆபீஸ் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் (FD) குறைந்தபட்சம் 1000 ருபாய் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டு:
உதாரணமாக நீங்கள் போஸ்ட் ஆபீஸ் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் (FD) 1வருட கால அளவை தேர்வு செய்து 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 6.90% வட்டி அளிக்கப்படுகிறது.
எனவே இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது உங்களுக்கு 708 ரூபாய் வட்டிதொகை கிடைக்கும். அதாவது நீங்கள் செலுத்திய 10 ஆயிரம் ரூபாயினையும் சேர்த்து 10,708 ரூபாய் தொகையை 1 வருடத்திற்கு பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |