Post Office Kisan Vikas Patra Calculator
நீங்கள் சம்பாதிக்கின்ற பணம் எவ்வளவாக இருந்தாலும், அதனை எதிர்காலத்திற்காக சேமிப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி நீங்கள் சேமிக்கும் பணத்தினை தேர்வு செய்யும் திட்டமானது எதிர்காலத்தில் அதிலிருந்து வருமானம் வர கூடியதாகவும் இருக்க வேண்டும், வட்டி தொகையும் அதிகமாக இருக்க வேண்டும். அதை எப்படி தேர்வு செய்வது என்று நினைக்கிறீர்களா.! நம் பதிவில் தினந்தோறும் எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு சேமித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள கிசான் விகாஸ் பாத்திரம் திட்டத்தில் 20,000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Kisan Vikas Patra Calculator:

போஸ்ட் ஆபீசில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த Kisan Vikas Patra Post Office திட்டமானது நாம் செலுத்தும் குறிப்பிட்ட தொகைக்கு இரு மடங்கு தொகையினை அளிக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்க தொடங்கிவிட்டால் உங்களுக்கு முதிர்வு காலம் முடிந்த பிறகு Certificate வழங்கப்படும்.
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் பயன் அடையலாம்.
2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
வட்டி:
இந்த திட்டத்தில் 7% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் வருமானம் எவ்வளவு கிடைக்கும்:
| டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
| Rs.20,000/- | Rs.20,000/- | Rs.40,000/- |
| Rs.50,000/- | Rs.50,000/- | Rs.1,00,000/- |
| Rs.1,00,000/- | Rs.1,00,000/- | Rs.2,00,000/- |
| Rs.2,00,000/- | Rs.2,00,000/- | Rs.4,00,000/- |
என்ன சொல்லுறீங்க மாதம் 2,000 ரூபாய் மட்டுமே செலுத்தி 3,24,412 ரூபாய் வரை பெறலாமா
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














