Post office RD 100 Per Month 5 Years
பொதுவாக நாம் அனைவரும் நமது ஊர்களில் உள்ள அஞ்சலத்தினை கடிதங்களுக்காக மட்டுமே தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் ஒரு சிலர் இதற்கான அடுத்த நிலையாக சேமிப்பு திட்டங்களுக்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். ஏனென்றால் மற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தபால் துறையில் தான் அதிகப்படியான வசதியும், வட்டியும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் RD திட்டம் நமக்கு தெரிந்த ஒன்று. இத்தகைய திட்டத்தை பற்றிய முழு விவரங்களை நாம் அறியவில்லை என்றாலும் அதில் பாதியளவு பற்றி தெரிந்து இருப்போம். அதிலும் இந்த திட்டத்திற்கான ஆரம்ப தொகை என்பது 100 ரூபாய் என்பது நமக்கு தெரியும். இந்த 100 ரூபாயினை நீங்கள் மாதந்தோறும் 5 வருடத்திற்கு போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டத்தில் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும் தெரியுமா..? ஒருவேளை இதுநாள் வரையிலும் இது உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த பதிவின் வாயிலாக விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க…!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
போஸ்ட் ஆபீஸ் ஆர்டி:
தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என யார் வேண்டுமானாலும் சேமிக்க தொடங்கலாம்.
இந்த கணக்கினை நீங்கள் திறக்க வேண்டும் என்றால் அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் எது வேண்டுமானாலும் தேவைப்படும்.
- ஆதார் அட்டை
- ரேஷன் கார்டு
- பான் அட்டை
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- ஓட்டுநர் உரிமம்
- வாக்காளர் அட்டை
சேமிப்பு தொகை:
- குறைந்தபட்ச தொகை- 100
- அதிகப்பட்ச தொகை- வரம்பு கிடையாது
முதிர்வு காலம்:
- 5 வருடம்
இதற்கான வட்டி விகிதமாக தற்போது 6.5% அளிக்கப்படுகிறது.
RD திட்டத்தில் மாதம் 100 ரூபாய் செலுத்தினால் 5 வருடத்தில் கிடைக்கும் அசல் எவ்வளவு:
முழு விளக்கம்:
மாத சேமிப்பு தொகை: 100 ரூபாய்
முதிர்வு காலம்: 5 வருடம்
வட்டி விகிதம்: 6.5%
மொத்த வட்டி தொகை: 5,498 ரூபாய்
சேமிப்பு தொகை: 30,000 ரூபாய்
அசல் தொகை: 35,498 ரூபாய்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |