Post Office RD Calculator 2023
பொதுவாக இன்றைய காலத்தில் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக பரவி வருகிறது. அதனால் தான் சேமிப்பு பற்றிய திட்டங்களை ஆராய்கின்றனர். நீங்கள் சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த திட்டத்தினை பற்றுக முழுமையாக தெரிந்து கொண்டு சேமிக்க வேண்டும். அதவது நீங்கள் ஒரு இடத்தில் வட்டிக்கு பணம் வாங்க போகிறீர்கள் என்றால் அதற்கு வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்றெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு தான் பணத்தை வாங்குவீர்கள். அதே போல தான் நீங்கள் சேமிக்கும் திட்டங்களிலும் எவ்வளவு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும், அதில் வட்டி எவ்வ்ளவு என்ற விவரத்தினை அறிந்து கொண்ட பிறகு தான் சேமிக்க வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தபால் துறையில் மாதந்தோறும் 2000 ரூபாய் RD திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
RD திட்டத்தில் மாதந்தோறும் 2000 செலுத்தினால் எவ்வளவு கிடைக்கும்:
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
சேமிப்பு தொகை:
RD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
வட்டி:
வட்டி தோராயமாக 6.20% வழங்கப்படுகிறது.
எவ்வளவு கிடைக்கும்:
நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 2000 ரூபாய் செலுத்தினீர்கள் என்றால் 5 வருடத்தில் 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டி தொகையாக 20,866 ரூபாய் வழங்கப்படுகிறது. டெபாசிட் செய்த தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 1,40,866 ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |