Post Office RD 3000 Per Month 5 Years Interest Rate in Tamil
நாம் சாதரணமாக ஒரு கடன் வாங்குகிறோம் என்றால் அந்த கடனிற்கான வட்டி, எவ்வளவு காலம் கட்ட வேண்டும் என்ற விவரம் தெரிந்த பிறகு தான் கடனை வாங்குவோம். ஏனென்றால் கடனை வாங்கிய பிறகு எல்லா விவரத்தையும் அறிந்தால் கடனை வாங்காமலே இருந்திருக்கலாம் என்று யோசிப்பார்கள். வட்டி மற்றும் அசல் தொகை சேர்த்து கட்ட வேண்டிய தொகை அதிகமாக இருக்கும், அந்த தொகையை கட்ட முடியாமல் போகிவிடும் நிலை ஏற்படும். கடன் மட்டுமில்லை நீங்கள் சேமிக்கின்ற சேமிப்பு திட்டமாக இருந்தாலும் அதற்கான வட்டி, எவ்வளவு காலம் செலுத்த வேண்டும், முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற விவரம் எல்லாம் அறிந்த பிறகு கணக்கை ஆரம்பிக்க வேண்டும். அன்ஹ்ட் வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் RD திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் சேமித்து வந்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று பார்ப்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தபால் துறையில் RD திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
தகுதி:
தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
டெபாசிட் தொகை:
இந்த சேமித்து திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
வட்டி:
இந்த திட்டத்திற்கான வட்டி தொகையாக தற்போது 6.20% வழங்கப்படுகிறது.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
நீங்கள் இந்த திட்டத்தில் 3000 ரூபாய் மாதந்தோறும் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் 5 வருடத்தில் உங்களுடையாக சேமிப்பு தொகையாக 1,80,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டி தொகையாக 31,301 ரூபாய் வழங்குவார்கள். முதிர்வு காலத்தில் வட்டி தொகை மற்றும் சேமிப்பு தொகை என சேர்த்து 2,11,301 ரூபாய் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |