போஸ்ட் ஆபீஸ் ஆர்டி
போஸ்ட் ஆபீசில் உள்ள ஆர்டி திட்டம் என்பது மக்கள் அனைவருக்கும் அதிகமாக தெரிந்த ஒரு திட்டமாக உள்ளது. ஏனென்றால் இதில் மிகவும் குறைவான அளவே முதலீடு தொகை ஆரம்பம் ஆவதால் மக்கள் அனைவரும் இதில் தான் அதிகமாக குழந்தையின் எதிர்காலத்தினை எண்ணி சேமிக்கிறார்கள். இத்தகைய முறை அனைத்தும் சரியாக இருந்தாலும் கூட இதனை பற்றிய ஒரு தெளிவான விளக்கம் என்பது அவர்களுக்கு முழுமையாக தெரியவில்லை. அதாவது உதாரணமாக நாம் ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்க போகிறோம் என்றால் அதில் உள்ள வட்டி, அசல் மற்றும் மொத்த சேமிப்பு தொகை என்ற அடிப்படையான விவரங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விளக்கங்கள் அனைத்தும் சரியாக தெரியவில்லை என்றால் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office RD 500 Per Month 5 Years Calculator:
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்கலாம்.
எங்கு சேமிப்பது:
உங்களுடைய ஊரில் உள்ள போஸ்ட் ஆபீசிலேயே உங்களின் பெயரிலோ அல்லது உங்களுடைய வீட்டில் உள்ளவர்களின் பெயரிலோ இந்த கணக்கினை ஆரம்பித்து சேமிக்க தொடங்கலாம்.
தேவையான ஆவணம்:
- வாக்காளர் அட்டை
- ரேஷன் கார்டு
- ஆதார் கார்டு
- பான் கார்டு
- ஓட்டுநர் உரிமம்
- பாஸ்போர்ட் அளவு போட்டோ
சேமிப்பு தொகை:
போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக உங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது அடிக்கடி மாற்றி அமைக்கப்பட்டாலும் கூட நீங்கள் கணக்கு தொடங்கும் போது உள்ள வட்டி விகிதம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தற்போதைய வட்டி விகிதம் 7.5% அளிக்கப்படுகிறது.
டெபாசிட் காலம்:
தபால் துறையில் உள்ள இந்த சேமிப்பு திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 வருடம் என நான்கு வகையான டெபாசிட் காலங்கள் உள்ளது. அதேபோல் டெபாசிட் காலத்திற்கு ஏற்றவாறு வட்டி அளிக்கப்படும்.
மாதம் 500 செலுத்தினால் 5 வருடத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு:
டெபாசிட் காலம் | மாதாந்திர சேமிப்பு தொகை | மொத்த சேமிப்பு தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால அசல் தொகை |
5 வருடம் | 500 ரூபாய் | 30,000 ரூபாய் | 6,449 ரூபாய் | 36,449 ரூபாய் |
குறிப்பு: உங்களுடைய டெபாசிட் தொகையினை பொறுத்து வட்டி தொகை மற்றும் அசல் தொகை ஆனது மாறுபடும்.
இதையும் படியுங்கள்👇 👇
இந்தியன் வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |