போஸ்ட் ஆபிசில் 5 வருடத்தில் 2,82,956 ரூபாய் கிடைக்கும், அப்போ நாம் எவ்ளோ டெபாசிட் செய்ய வேண்டும்..

Advertisement

Post Office Time Deposit Calculator

நாம் ஒவ்வொருவரும் முதலீடு செய்வதில் சிந்தனை அதிகமாக செலுத்துகிறீர்கள். ஆனால் ஒவ்வொரு திட்டத்திலும் சேர்ந்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று தெரிந்தால் அதில் முதலீடு செய்வதற்கு ஈசியாக இருக்கும் அல்லவா.! புரியவில்லை என்றால் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். அதாவது வங்கியில் அல்லது வெளியில் கடனாக பணம் வாங்குகிறீர்கள் என்றால் அந்த கடனை பெறுவதற்கு முன் அந்த கடனுக்கான வட்டி, கால அளவு போன்ற எல்லா தகவலையும் தெரிந்து கொண்ட பிறகு தான் கடனை பெறுவோம். அது போல முதலீடு செய்வதற்கு முன் அதில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த பதிவில் போஸ்ட் ஆபிசில் டைம் டெபாசிட் திட்டத்தில் 2 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Time Deposit Calculator 2023: 

post office time deposit 2 lakh calculator in tamil

இந்த திட்டத்தில் ஒரு முறை டெபாசிட் செய்து 5 வருடம் கழித்து வட்டி மற்றும் முதலீட்டு தொகை சேர்ந்து கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வயது தகுதி, முதலீட்டு தொகை போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். போஸ்ட் ஆபீஸில் 5 வருடத்தில் வட்டி மட்டுமே 1,79,647 ரூபாய் பெறக்கூடிய இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா..?

வட்டி:

இந்த திட்டத்தில் நீங்கள் தேர்வு செய்யும் முதிர்வு ஆண்டினை பொறுத்து வட்டி மாறுபடும்.

Post Office Time Deposit Scheme 2023
1 வருடம் 2 வருடம் 3 வருடம் 5 வருடம்
6.60% 6.80% 6.90% 7%

 

2 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

2 லட்சம் டெபாசிட் செய்து 2 வருடத்தில் பாலிசியை முடித்து கொண்டால்  இதற்கு வட்டியாக 29,776 ரூபாய் மற்றும் முதலீட்டு தொகை என சேர்த்து 2,29,776 ரூபாய் கிடைக்கும்.

அதுவே நீங்கள் 5 ஆண்டு கால அளவில் பாலிசியை முடித்தால் வட்டி தொகையாக 82,956 ரூபாய் மற்றும் முதலீட்டு தொகை என சேர்த்து 2,82,956 ரூபாய் கிடைக்கும்.

குறிப்பு: உங்களுடைய டெபாசிட் தொகை மற்றும் முதலீட்டை பொறுத்து வட்டி தொகை மற்றும் அசல் தொகை ஆனது மாறுபடும்.

போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா 

இந்தியன் வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement