444 நாளில் ரூ.1,01,806/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

Punjab National Bank Spl FD Interest Rates

Punjab National Bank Spl FD Interest Rates

நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது பஞ்சாப் நேசனல் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெப்பாசிட் ஸ்கீம் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது பஞ்சாப் நேசனல் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெப்பாசிட் ஸ்கீமிற்கு வட்டி விகிதம் இந்த மே 18 தேதியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது அது குறித்த தகவல்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

444 நாளில் ரூ.1,01,806/- வட்டி தரும் சேமிப்பு – Punjab National Bank Spl FD Interest Rates:

இந்த ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீமில் இணைய விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து இந்த திட்டத்தில் இணையலாம், அதேபோல் அதிகபட்சமாக நீங்கள் 2 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துகொள்ளலாம்.

பஞ்சாப் நேசனல் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெப்பாசிட் ஸ்கீமின் கால அளவு 444 நாட்கள் மற்றும் 666 நாட்கள் என்று இரண்டு வகையில் வழங்கபடுகிறது. ஆக இவற்றில் நீங்கள் எந்த டெபாசிட் காலம் வேண்டுமோ அதனை தேர்வு செய்து டெபாசிட் செய்துகொள்ளலாம்.

இந்த ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீமில் 60 வயது மேற்பட்டவருக்கு கொஞ்சம் கூடுதலாக வட்டி வழங்கபடுகிறது. அதேபோல் 80 வயது மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாக வட்டி வழங்கபடுகிறது.

இந்த திட்டத்தில் Nomination, Loan Facility வசதி வழங்கபடுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Fixed Deposit -க்கு அதிக வட்டி எந்த வங்கியில் வழங்கப்படுகிறது தெரியுமா..?

எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது?

கால அளவு பிரிவு வட்டி
444 நாட்கள் பொது பிரிவினர் அதாவது 60 வயதிற்கு குறைவாக உள்ளவர்களுக்கு 7.25%
60 வயது நிரம்பியவர்களுக்கு  7.75%
80 வயது நிரம்பியவர்களுக்கு  8.05%

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

டெபாசிட் தொகை பொது பிரிவினர் 60 வயது நிரம்பியவர்களுக்கு  80 வயது நிரம்பியவர்களுக்கு 
50,000 54,567 54,894 55,090
1,00,000 1,09,134 1,09,787 1,10,181
2,00,000 2,18,267 2,19,514 2,20,361
5,00,000 5,45,668 5,48,935 5,50,903
10,00,000 10,91,335 10,97,870 11,01,806

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking