Rbl வங்கியில் Credit கார்டு பெறுவதற்கு கட்டாயம் இந்த தகுதியினை பெற்றிருந்தால் போதும்..!

Advertisement

ஆர்பிஎல் வங்கி

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சில ஆசைகள் மற்றும் அன்றாட தேவைகள் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது உள்ள நடைமுறை வாழ்க்கையினை ஒப்பிட்டு பார்க்கும் போது அனைவரும் அவர் அவருடைய தேவைக்காக Credit கார்டு உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் Credit கார்டில் நிறைய வகைகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பார்த்தால் ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு மாதிரியான Credit கார்டு இருக்கும். இப்படி இருக்கும் போது நாம் ஏதாவது ஒரு வங்கியில் Credit பெற வேண்டும் என்றால் முதலில் அதற்கான முழு தகவலையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையால் Rbl வங்கியில் Credit கார்டு பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் என்ன தகுதி வேண்டும் மற்றும் அதனை அப்ளை செய்வதற்கு என்ன ஆவணங்கள் வேண்டும் என்பதையும் விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

Eligibility Ror Rbl Bank Credit Card:

 eligibility for rbl bank credit card in tamil

இன்றைய காலத்தை பொறுத்தவரை அதிக நபர்கள் பயன்படுத்த கூடிய வங்கிகளில் இந்த Rbl வங்கியும் ஒன்று. இந்த வங்கியில் அடிப்படையில் மாத சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சொந்தமாக சுயதொழில் செய்பவர் யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளும் வசதி உள்ளது. 

Credit கார்டு விண்ணப்பிக்க உள்ள நபர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது இந்த வங்கியின் விதிமுறை ஆகும்.

இதனை பொறுத்தவரை ஆண்டு வருமானம் என்று குறிப்பிட்ட தொகையினை கூற முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கார்டுக்கும் இதனுடைய ஆண்டு வருமானம் என்பது வேறுபடுகிறது. 

அதேபோல் நீங்கள் இதற்கு முன்பாக கடன் எதுவும் பெற்றிருந்தால் அதனை பூர்த்தி செய்ததற்கான விவரத்தையும் மற்றும் வேறு ஏதாவது Credit கார்டு நீங்கள் வைத்து இருந்தால் அதற்கு மாதந்தோறும் பில் செலுத்தும் விவரத்தையும் வங்கியில் உள்ள அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களுடைய Credit கார்டு மதிப்பெண்ணாது 750-ற்கு மேல் இருக்க வேண்டும்.

நீங்கள் Rbl வங்கியில் Credit கார்டு வாங்கி இருந்தால் முதல் 50 நாட்கள் மட்டும் வட்டி இல்லாத காலமாக இருக்கும்.

கனரா வங்கியில் Credit கார்டு பெறுவதற்கு தேவையான தகுதி என்ன தெரியுமா..?

Rbl Bank Credit Card Documents Required in Tamil:

  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • வாக்காளர் அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • பாஸ்போர்ட்
  • Pass Port Size Photo

Document for monthly salary Person:

  1. அடையாள அட்டை
  2. கடந்த 3 மாத சம்பள சீட்டு (Pay Slip)
  3. கடந்த 3 மாத சம்பளம் வங்கி கணக்கு நகல் (Bank Statement)
SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!

Types of Rbl Credit Card in Tamil:

 types of rbl credit card in tamil

  • Entertainment Card
  • Lifestyle Card
  • Business Card
  • Life Time Free Card
  • Travel Card
  • Reward Card
  • Cash Pack Card
  • Shapping Card

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் நீங்கள் உங்களுடைய தகுதி ஏற்றவாறு கார்டினை பெற்று கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு கார்டுக்கு வருடாந்திர மற்றும் மாத கட்டணம் என்பது முற்றிலும் வேறுபாடும்.

இதில் Life Time Free Card-க்கு மட்டும் எந்த விதமான வருடாந்திர கட்டணமும் இருக்காது.

ICICI வங்கியில் வீட்டு லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்..!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement