400 நாட்களில் 5,42,938 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.!

Advertisement

 SBI Amrit Kalash Scheme Details in Tamil

நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதனை கொஞ்சம் கூட தாமதம் செய்ய கூடாது. ஏனென்றால் நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்கினால் தான் பிற்காலத்தில் அது உங்களுக்கு ஒரு நல்ல பலனை அளிக்கக்கூடிய தொகையாக கிடைக்கும். இதுபோல நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்காக நிறைய வகையான திட்டங்களை நம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் உள்ள அம்ரீட் கலாஷ் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Fixed Deposit Scheme in Tamil:

sbi amrit kalash scheme details

SBI அம்ரித் கலாஷ் திட்டம் டிசம்பர் 31 வரை மட்டுமே பயன் அடையலாம்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயாகவும், அதிகபட்சம் தொகையாக 2 கோடி வரை முதலீடு செய்யலாம்.

வட்டி:

இந்த திட்டத்திற்கு 60 வயதுக்கு குறைவான நபர்களுக்கு 7.10%, சீனியர் சிட்டிசனுக்கு 7.60%  வட்டி கொடுக்கப்படுகிறது. ஒரு முறை நீங்கள் முதலீடு செய்தால் அதற்கான வட்டி தொகையை ஒவ்வொரு மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை அல்லது நீங்கள் விருப்படுகின்ற கால அளவுகளில் பெற்று கொள்ளலாம். இல்லையென்றால் 400 நாட்கள் முடிந்த பிறகு நீங்கள் செலுத்திய முதலீடு மற்றும் வட்டியோடு சேர்த்து பெற்று கொள்ளலாம்.

டெபாசிட் காலம்:

அமீர் கலாஷ் திட்டமானது 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டம் ஆகும்.

கடன் வசதி:

இந்த திட்டத்தில் கடன் எடுக்கும் வசதியும் உண்டு. நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளீர்களோ அதை பொறுத்து கடன் தொகை பெற்று கொள்ளலாம்.

நீங்கள் ஏதவாது ஒரு SBI வங்கியில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த  வங்கிக்கும்  வேண்டுமானாலும் TRANSACTION செய்து கொள்ளும் வசதி உண்டு.

இந்த திட்டத்தில் எவ்வளவு கிடைக்கும்:

ஜெனரல் பப்ளிக் 5 லட்சம் டெபாசிட் செய்து இந்த திட்டத்தில் சேர்ந்தால் இதற்கு வட்டி தொகையாக 40,029 ரூபாய் கிடைக்கும். சேமிப்பு வட்டி என சேர்த்து மொத்த தொகையாக 5,40,029 ரூபாய் கிடைக்கும்.

அதுவே நீங்கள் சீனியர் சிட்டின்சனாக இருந்து இந்த திட்டத்தில் சேர்ந்தால் 5,42,938 ரூபாய் கிடைக்கும்.

வங்கியில் நகையை வைத்து 5 லட்சம் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா.!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement