SBI Bank 365 Days RD Interest Rate Calculator in Tamil
இன்றைய சூழலில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளித்து நமது என்ற வாழ்க்கையை சீராக நடத்தி செல்ல வேண்டும் என்றாலே அதற்கு நம்மிடம் அதிக அளவு பணம் இருக்க வேண்டும். இந்நிலையில் நமது எதிர்காலத்தில் இன்னும் அதிகமான பணம் நமக்கு தேவைப்படும் அதனால் அனைவருமே தங்களது எதிர்காலத்திக்காக சேமிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் நாம் அனைவரின் மனதிலும் எழும் ஒரு பொதுவான கேள்வி என்றால் அது நாம் சேமிக்க இருக்கின்றோம் என்றால் இன்று நடைமுறையில் உள்ள எந்த சேமிப்பு திட்டம் நமக்கு அதிக அளவு பலனை திருப்பி அளிக்கும் என்பது தான். அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியில் உள்ள Rd திட்டத்தில் 4,000 ரூபாய் சேமித்தால் நமக்கு எவ்வளவு வட்டி மற்றும் மெச்சூரிட்டி அமௌன்ட் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க.. அதனால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
SBI வங்கி RD சேமிப்பு திட்டம்:
சேமிப்பு தொகை:
நீங்கள் இந்த SBI வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.
வட்டி விகிதம்:
SBI வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.80% முதல் 7.50% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
தபால் துறையில் மாதம் 3000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்
இந்தியன் வங்கியில் மாதம் 3,000 சேமித்தால் 1 வருடத்தில் வட்டி மற்றும் மெச்சூரிட்டி எவ்வளவு கிடைக்கும்
உதாரணமாக..
ஜென்ட்ரல் சிட்டிசன்:
இப்பொழுது நீங்கள் ஒரு ஜென்ட்ரல் சிட்டிசன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் SBI வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 4000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 6.80% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
அதாவது உங்களுக்கு மொத்தமாக 1,794 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு, நீங்கள் சேமித்த செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 49,794 ரூபாய் பெறுவீர்கள்.
சீனியர் சிட்டிசன்:
இப்பொழுது நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் SBI வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 4000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 7.30% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
அதாவது உங்களுக்கு மொத்தமாக 1,929 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு, நீங்கள் சேமித்த செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 49,929 ரூபாய் பெறுவீர்கள்.
4,00,000 முதலீடு செய்து 8,00,000 ரூபாயை வருமானமாக பெற வேண்டுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |