SBI Bank 5 Lakh Gold Loan Interest Rate Calculator in Tamil
பொதுவாக மனிதர்களின் வாழ்க்கையில் கடன் வாங்குவது சாதாரண ஒன்றாகி விட்டது. சில பேர் வட்டிக்கு பணம் வாங்குவார்கள், சில பேர் குழுவில் கடன் வாங்குவார்கள், சில பேர் தம்மிடம் உள்ள பொருட்கள் மற்றும் நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவார்கள். நகைகளை பெரும்பாலும் தனியார் நிறுவனத்திடம் வைத்து தான் வாங்குகிறார்கள். தனியாரிடம் நகை வைத்து கடன் பெற்று கொள்ளும் போது அதற்கான வட்டி அதிகமாக இருக்கும். வங்கிகள் நகை கடன்களை குறைந்த வட்டி தொகையில் வழங்குகின்றது. இன்றைய பதிவில் sbi வங்கியில் நகையை வைத்து 5 லட்சம் கடன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI வங்கியில் 5 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை:
வட்டி:
SBI வங்கியில் தங்க நகைக்கடனுக்கு தோராயமாக 7.30% வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச தொகை:
SBI வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 50 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் செலுத்தும் காலம்:
SBI வங்கியில் நீங்கள் பெற்ற நகைக்கடனை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
SBI வங்கியில் 5 லட்சம் நகைக்கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு.?
நீங்கள் SBI வங்கியில் வாங்கிய 5 லட்சம் நகை கடனுக்கு 3 வருடத்தில் 51,682 ரூபாய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 15,325 ரூபாய் செலுத்த வேண்டும். 3 வருடத்தில் 5 லட்சம் நகை கடன் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 5,51,682 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |