SBI Bank 7 Lakh Car Loan EMI Calculator in Tamil
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் அல்லது கனவுகள் இருக்கும். அப்படி உள்ள பல கனவுகளில் ஒன்று தான் தனது சொந்த உழைப்பில் கார் வாங்க வேண்டும் என்பது அதற்காக நீங்கள் பல வகையில் பணத்தை சேமிப்பீர்கள். ஆனாலும் திடீரென்று உங்களுக்கு வேறு ஏதாவது பணத்தேவை வந்து விடும் அதற்காக நீங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை செலவழித்துவிடுவீர்கள். அதனால் கார் வாங்க வேண்டும் கனவு கனவாகவே போகிவிடும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் கார் கடன் அல்லது வாகன கடனை அளிக்கின்றன.
அதனால் அதனை பெற்று உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள். அப்படி வங்கியில் கடன் பெறும் போது, அந்த கடனிற்கு எவ்வளவு வட்டி, மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் SBI பேங்கில் 7 லட்சம் கார் லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு SBI வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு
Car Loan in Tamil:

பொதுவாக வங்கிகளில் பெறப்படும் மற்ற வகை கடன்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு விலை மதிப்புள்ள சொத்தையோ அல்லது பொருளையோ அடமானமாக வைக்க வேண்டியிருக்கும்.
ஆனால் கார் கடன் பெறுவதற்காக எந்த ஒரு சொத்தையோ, பொருளையோ அடமானாக வைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நீங்கள் ஒரு வங்கியில் கார் லோனை வாங்கி விட்டு அதனை EMI முறை மூலம் திருப்பி செலுத்தலாம்.
SBI Bank Car Loan Interest Rate in Tamil:
இப்பொழுது SBI வங்கியில் கார் லோன் பெற இருக்கின்றீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதம் 8.60% வரை வசூலிக்கபடுகின்றது. அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 7 ஆண்டுகள் கால அவகாசத்தை SBI வங்கி வழங்குகிறது.
SBI Bank 7 Lakh Car Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை: 7,00,000
வட்டி விகிதம்: 8.60%
கடன் செலுத்த வேண்டிய காலம்: 7 வருடம்
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை: ரூ. 11,121
மொத்த வட்டி தொகை: ரூ. 2,34,145
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை: ரூ. 9,34,145
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> SBI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிந்து கொள்ளவும்
இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














