SBI வங்கியில் பைக் கடன் பெற்றால் குறைவான வட்டியா..?

SBI Two Wheeler Loan Interest Rate Calculator

SBI Two Wheeler Loan Interest Rate Calculator

எவ்வளவு தான் ஆசை இருந்தாலும் நம்முடைய முதல் கட்ட வெற்றியாக பார்ப்பது நம் வீட்டில் ஒரு பைக் வாங்குவதை தான். முதலில் ஒரு வெற்றியை பார்க்கிறோம் அல்லவா..? அதன் பின்பு தான் கார் வாங்குவது, வீடு வாங்குவது என்று நிறைய மாற்றம் ஏற்படும். ஆனால் ஒரு சில வீட்டில் பைக் வாங்குவதை பெரிய ஆசையாக வைத்திருக்கிறோம். இந்த பைக் வாங்குவது என்ன அவ்வளவு கஷ்டமா  என்றால் நிச்சயம் கிடையாது.

ஆனால் கொஞ்சம் கஷ்டம் தான் ஏனென்றால் மொத்தமாக பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை இருக்கும்..! ஒரு சிலர் நினைப்பீர்கள் அதற்கு தான் நிறைய EMI வந்துவிட்டதே என்று. ஆனால் அதுவும் நீங்கள் சரியாக பணத்தை செலுத்தவில்லை என்றால் உங்களுடைய பைக் எடுத்து சென்று விடுவார்கள். ஆகவே மொத்தமாக பணம் தேவை என்றால் எவ்வளவு தேவைப்படும். அதனை வங்கியில் பெறுவது எப்படி அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Sbi Two Wheeler Loan Interest Rate Calculator:

இருசக்கர வாகன கடன்  பைக்  விலையுர்ந்த பைக் 
வட்டி விகிதம் 17.75% p.a. – 19.50% p.a. —–
அதிகபட்ச கடன் தொகை 3 லட்சம் 25 லட்சம்
குறைந்தபட்ச கடன் தொகை 20,000 Rs.1.50 லட்சம்
வருமான தொகை மாதம் Rs.12,500 ஆண்டுக்கு Rs.2.5 லட்சம்
செலுத்தும் காலம் 4 வருடம்  4 வருடம்
முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் கடன் தொகையில் 2.00% மற்றும் வரிகள் கடன் தொகையில் 1.00% மற்றும் வரிகள்

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023-ல் கனரா வங்கியில் 1 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

சிறப்பம்சங்கள்:

  • இந்த பணத்தை கொண்டு எந்த வகையான வாகனங்கையும் வாங்க பயன்படுத்தலாம்.
  • ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், மொபெட்கள், சூப்பர் பைக்குகள் மற்றும் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் வாங்க பயன்படுத்தலாம்.
  • உங்களின் வருமானத்தை அதிகரிக்க விண்ணப்பதாரின் வருமானத்தையும் இணைக்கலாம்.
  • அதிக ஆவணங்கள் அளிக்க தேவையில்லை. குறைந்தபட்சம் ஆவணம் கிடைக்கும்.
  • சூப்பர் பைக் கடன் விண்ணப்பதாரர்கள் SBI சம்பளம், தொகுப்பு/செல்வம்/HNI வாடிக்கையாளர்களாக இருந்தால் 90% வரை நிதியுதவி கிடைக்கும்.

2023-ல் கனரா வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா  அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking