5 Lakh for Business Loan SBI Bank Calculator
அனைவருக்கும் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட அதற்கான முதலீட்டை எவ்வாறு பெறுவது என்ற குழப்பம் தான் வருகிறது. அப்படி பார்த்தால் யாரிடமும் சென்று தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்து நமக்கு வேண்டிய தொகையினை கடனாக பெற முடியாது. இத்தகைய முறையினை சிந்தித்து பெரும்பலான நபர்கள் வங்கியில் சென்று தான் தனக்கு வேண்டிய லோனை பெறுகிறார்கள். வங்கியில் லோன் பெறுவது என்பது சாதாரணமானதாக இருந்தாலும் கூட அதில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அதாவது கடனுக்கான EMI தொகை, வட்டி மற்றும் அசல் என இவை அனைத்தினையும் முன்பே திட்டமிடுவது நல்லது. அதனால் இன்று ஒரு உதாரணத்திற்கு இவற்றை எல்லாம் எப்படி தெரிந்துக்கொள்வது என்று SBI வங்கியில் 5 லட்சம் ரூபாய் பிசினெஸ் லோன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கட்ட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க…!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/3Bfc0Gl |
5 லட்சம் பிசினெஸ் லோன்:
கடன் தொகை:
SBI வங்கியில் தொழில் கடனுக்கான குறைந்தப்பட்ச தொகையாக 10,000 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 500 கோடி ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்:
நீங்கள் வாங்கும் கடன் தொகையினை பொறுத்து வட்டி விகிதம் இருந்தாலும் கூட இந்த வங்கியில் ஆண்டிற்கு தோராயமாக 9.00% முதல் 11.45% வரை வசூலிக்கப்படுகிறது.
கடனுக்கான ஆண்டு:
கடனாக வாங்கிய தொகையினை 15 வருடத்திற்குள் திருப்தி செலுத்தி விட வேண்டும்.
வங்கியில் வாங்கிய 25 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டியும், அசலும் சேர்த்து எவ்வளவு வரும் தெரியுமா
5 லட்சத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?
விரிவான விளக்கம்:
கடனாக வாங்கிய தொகை: 5,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 9%
கடனுக்கான ஆண்டு: 5 வருடம்
EMI தொகை: 10,379 ரூபாய்
மொத்த வட்டி: 1,22,751 ரூபாய்
அசல் தொகை: 6,22,751 ரூபாய்
வங்கியில் 19 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |