SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ இதை நீங்கதான் கண்டிப்பாக தெரிஞ்சிக்கணும்..!

Advertisement

SBI Bank FCNR Deposit Details in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் ஏதாவது வங்கி கணக்கு உள்ளது. அதாவது நிலையான கணக்கு அல்லது சேமிப்பு கணக்கு என ஏதாவது ஒரு கணக்கு உள்ளது. அதே போல் வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகளையும் பல வகையான புதிய புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி கொண்டே தான் உள்ளது. அப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சலுகைகள் மற்றும் திட்டங்களை பற்றி நாம் அனைவருக்கும் தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் தான் இன்று SBI Bank FCNR Deposit பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை படித்து இந்த FCNR Deposit என்றால் என்ன இதில் யாரெல்லாம் Deposit செய்ய முடியும் இதில் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank FCNR Deposit என்றால் என்ன..?

SBI Bank FCNR Deposit Interest Rates in Tamil

முதலில் இதில் யாரெல்லாம் டெபாசிட் செய்ய முடியும் என்று தெரிந்து கொள்வோம். அதாவது இந்த FCNR கணக்கு என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் இந்திய வங்கியில் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பதற்கான நிலையான கால வைப்பு கணக்கு ஆகும்.

அதாவது இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெளிநாட்டு நாணயங்களுக்கு வருவாய் வரி இல்லமால் வட்டி அளிக்கும். FCNR காலம் முடிந்த பிறகு, அதைப் புதுப்பிக்கலாம் அல்லது இந்தியக் கணக்கிற்கு மாற்றலாம் அல்லது NRI வசிக்கும் நாட்டில் உள்ள கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம்.

SBI வங்கியில் 6 லட்சம் தொழில் கடனுக்கு இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும்

SBI Bank FCNR Deposit Interest Rates in Tamil:

நீங்கள் இந்த SBI FCNR கணக்குகளில் வைத்துள்ள தொகைக்கான வட்டி விகிதம் நீங்கள் இந்த கணக்கில் எவ்வளவு காலம் உங்கள் தொகையினை வைத்திருக்கின்றீர்கள் எந்த நாட்டின் பணத்தை வைத்திருக்கின்றீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும்.

காலம்  அமெரிக்க டாலர்கள் பிரிட்டிஷ் பவுண்டுகள் யூரோக்கள் ஜப்பானிய யென் கனடிய டாலர்கள் ஆஸ்திரேலிய டாலர்கள்
1 ஆண்டு 5.25% 4.50% 1.50% 0.02% 4.30% 3.60%
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை 5.25% 4.50% 1.50% 0.02% 4.30% 3.60%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 4.20% 2.35% 1.50% 0.05% 4.10% 3.50%
3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை 4.05% 2.45% 1.50% 0.05% 3.85% 3.00%
4 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 4.10% 2.63% 1.50% 0.05% 3.70% 3.00%
5 ஆண்டுகள் மட்டுமே 4.15% 2.45% 1.50% 0.05% 3.97% 3.00%

 

HDFC வங்கியில் கணக்கு வைத்து கொண்டு இதை தெரிஞ்சிக்காமல் இருந்தால் எப்படி

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement