SBI Bank Gold Loan Interest Rate in Tamil
பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாகும். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக செயல்படுகிறது. இவ்வங்கி பல விதமான வங்கி கடன்களை வழங்கி வருகிறது. அக்கடன்களில் ஒன்றான தங்க நகைக்கடனிற்கு எவ்வளவு வட்டி மற்றும் அதற்கான EMI தொகை மற்றும் தகுதிகள் போன்ற பல விவரங்களை பின்வருமாறு தொகுத்துள்ளோம். எனவே, வங்கிகளில் கோல்டு லோன் பெறப்போகிறீர்கள் என்றால் இப்பதிவை படித்து கோல்டு லோன் பற்றிய விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Bank Gold Loan Details in Tamil:
வட்டி விகிதம்:
SBI வங்கியில் தங்க நகைக்கடனிற்கு 8.80% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
கடன் தொகை:
SBI வங்கியில் நகையை வைத்து குறைந்தபட்சம் 20,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்று கொள்ளலாம்.
வயது தகுதி:
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை உள்ளவர்கள் SBI வங்கியில் நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய நகைக்கடனை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- அடையாள சான்று
- முகவரி சான்று
- இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
SBI பேங்கில் 5 லட்சம் கோல்டு லோன் பெற்றால் அதற்கான மொத்த வட்டித்தொகை எவ்வளவு.?
கடன் தொகை – 5 லட்சம்
வட்டி விகிதம் – 8.80%
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை – 15,853 ரூபாய்
மொத்த வட்டி தொகை – 70,721 ரூபாய்
மூன்று வருடத்தில் மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை – 5,70,721 ரூபாய்
குறிப்பு: உங்களுக்கான வட்டித்தொகை மற்றும் மொத்தத்தொகை நீங்கள் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும்.
SBI வங்கியில் 3 லட்சம் கார் லோன் பெற்றால் அதற்கான EMI மற்றும் மொத்த வட்டித்தொகை எவ்வளவு
இந்தியன் வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா.?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |