SBI Business Loan 20 Lakh EMI Calculator
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். தினமும் இந்தப் பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல SBI பல விதமான கடன்களை வழங்கி வருகிறது. அப்படி வழங்கும் கடன்களில் வணிக கடனும் ஓன்று. அந்த வகையில் இன்று SBI வங்கியில் 20 லட்சம் வரை வணிக கடன் பெற்றால் அதற்கு நாம் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
SBI வங்கியில் வியாபார கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் விவரங்கள்..! |
SBI Business Loan EMI Calculator in Tamil:
SBI வணிகக் கடன் EMI என்பது, கடன் வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிக்கு செலுத்த வேண்டிய ஒரு நிலையான தொகையாகும். இந்த EMI Calculator மூலம் நாம் பெற்ற கடன் தொகை, வட்டி விகிதம் அல்லது திருப்பிச் செலுத்தும் காலம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள முடியும்.
நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு SME, MSME மற்றும் வணிகக் கடன்களை வழங்கும் முன்னணி வங்கி நிறுவனங்களில் SBI வங்கியும் ஒன்றாகும். SBI வழங்கப்படும் கடன் தொகையும் வாடிக்கையாளரின் தேவைகளுடன் பொருந்துகிறது. அதனால் தான் மக்கள் பெரும்பாலும் இந்த வங்கியில் பல விதமான கடன்களை பெறுகிறார்கள்.
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..? |
SBI Business Loan 20 Lakh EMI Calculator in Tamil:
அனைவருமே வங்கியில் கடன் பெறுவதற்கு முன் அது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, உதாரணத்திற்கு நாம் இப்போது 50,000 கடன் பெறுகிறோம் என்றால், அதற்கு EMI, வட்டி விகிதம் (Interest Rate) எவ்வளவு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நீங்கள் ஒரு தொழில் தொடங்குவதற்கு SBI வங்கியில் 20 லட்சம் வரை வணிக கடன் பெறுகிறீர்கள். அதற்கான EMI மற்றும் வட்டி விகிதம் (Interest Rate) எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா..?
தற்பொழுது வணிக கடன் வட்டி விகிதம் 8.85% சதவிகிதமாக இருக்கிறது. பெற்ற கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
அதை வைத்து பார்க்கும்பொழுது நீங்கள் 20 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கான EMI 41,371 ஆக இருக்கும். 20 லட்சத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி 4,82,275 ஆக இருக்கும். அதுபோல நீங்கள் பெற்ற 20 லட்சத்திற்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 24,82,275 ஆக இருக்கும்.
SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..! |
வீட்டு கடன் என்றால் என்ன..? SBI -இல் என்ன வகையான வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன..! |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |