SBI FD Interest Rates
இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே எதிர்கால சேமிப்பு பற்றிய அதிக விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் எந்த திட்டத்தில் சேமித்தால் அதிக முதிர்வுத்தொகை கிடைக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வதில் தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அப்படி உங்களுக்கும் சந்தேகம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். நமது சேமிப்பு நமது எதிர்காலத்திற்கு முக்கிய பாதுகாப்பாக இருக்கும். அதனை நாம் சரியாக சேமிப்பது மட்டும்மல்லாமல் சரியாக பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய பதிவில் SBI வங்கி வழங்கும் FD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துக் கொள்ளவோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Fixed Deposit Details in Tamil:
SBI வங்கியின் FD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.
சேமிப்பு தொகை:
ஒரு நபர் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக 2 கோடி வரை எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.
வட்டிவிகிதம்:
SBI வங்கியின் FD திட்டத்தில் உங்களுக்கு 3.00% முதல் 7.60% வரை அளிக்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது நீங்கள் திட்டத்தை தொடங்கி 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை ஆகும்.
எவ்வளவு மெச்சூரிட்டி அமௌன்ட் கிடைக்கும்.?
எடுத்துக்காட்டக ..
நீங்கள் 65 உட்பட்ட இந்திய குடிமகனாக இருந்து, நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் சேமித்தல் 5 வருடத்தின் முடிவில் வட்டித் தொகை மட்டும் 38,042 ரூபாய் கிடைக்கும். அசல் தொகையுடன் சேர்த்து 1,38,042 ரூபாய் கிடைக்கும்.
அதுவே நீங்கள் 65 வயதை கடந்த இந்திய குடிமகனை இருந்தால், இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 1 லட்சம் முதலீடு செய்தல் வட்டி தொகை மட்டும் 44,995 ரூபாய் தரும். அசல் தொகையுடன் சேர்த்து 1,44,995 ரூபாய் கிடைக்கும்.
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














