SBI Gold Loan Interest Rate Calculator
மனிதனாக பிறந்த அனைவருமே சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. சிறிய தொகையாக இருந்தால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கடனை பெறுவோம். அதுவே பெரிய தொகையாக இருந்தால் வெளியில் வட்டிக்கு தான் வாங்குவோம். இப்படி வட்டிக்கு வாங்கும் போது வாங்கிய கடனை விட வட்டி அதிகமாகி விடும். அதனால் தான் நமக்கு வங்கிகள் பல வகையான கடன்களை அளிக்கின்றது. அதாவது வீட்டு கடன், கல்வி கடன், வியாபார கடன், வாகன கடன், நகை கடன் போன்ற கடன்களை வழங்குகிறது. ஆனால் நமக்கு தான் இந்த கடன்களை பற்றிய புரிதல் இல்லை. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு கடனுக்கும் வெவ்வேறு வட்டிகள் உள்ளது. அதனால் இந்த பதிவில் SBI வங்கியில் 1 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நகை கடன் வாங்குவதற்கு தகுதிகள்:
நகை கடன் வாங்குபவர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கடன் தொகை 20,000 முதல் 2 கோடி வரை வழங்குகிறது.
கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு 3 வருடம்.
இதற்கு வட்டியாக 7.50% வசூலிக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- முகவரி சான்று
- போட்டோ
1 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு:
நீங்கள் நகையை வைத்து 1 லட்சம் கடனை வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு வட்டியாக 7.30% வசூலிக்கப்படுகிறது. நகை கடனை 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
வாங்கிய கடனுக்கு வட்டி தொகையாக 11,652 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். வாங்கிய கடனுக்கு EMI தொகையாக மாதந்தோறும் 3101 ரூபாய் செலுத்த வேண்டும். அசல் தொகை மற்றும் வட்டி என சேர்த்து மொத்த தொகையாக 1,11,652 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
SBI வங்கியில் 3 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா.. அப்போ EMI எவ்வளவு இருக்கும்
SBI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |