வங்கியில் வாங்கிய Home Loan-னை Easy-யா அடைக்க இந்த முறையை Follow பண்ணுக…

Advertisement

Home Loan in SBI Bank 

இக்காலத்தில் சொந்த வீடு கட்டுவது என்பது அனைவரது கனவாகவே இருக்கிறது. ஏனென்றால், இக்காலத்தில் உள்ள பொருட்கள் அனைத்துமே வரவுக்கு மிஞ்சிய விலையாகத்தான் இருக்கிறது. அதிலும், ஒரு மாடி வீடு கட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இதனை எளிமையாக்கும் வகையில் வங்கிகள் வீட்டு கடன்கள் வழங்குகின்றன. வீட்டு கடன் என்பது ஒரு குறிப்பிட்ட தொகையினை வங்கியில் பெற்று, அதனை மாதாந்திர தவணைகள் மூலம் திருப்பி செலுத்தும் முறையாகும். இந்தியாவில் பல்வேறு வங்கிகள் வீட்டு கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், SBI வங்கியின் வீட்டுக் கடன் பற்றிய சில விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

SBI Home Loan 15 Lakh Prepayment Calculation:

கடன் தொகை மற்றும் வட்டி விகிதம்: 

நீங்கள் SBI வங்கியில் கடனாக 15 லட்சத்தை தோராயமாக 8.40 % வட்டிவிகிதத்திற்கு வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் கடனை மாத தவணைகள் மூலம் 30 வருடத்திற்கு கட்டவேண்டிவரும்.

கடனுக்கான EMI தொகை:

15 லட்சம் வீட்டு கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக ரூபாய் 11,428 வரை கட்ட வேண்டி இருக்கும்.

15 லட்சம் விட்டுக்கடனின் EMI & வட்டி விகிதம்:

இந்த EMI தொகையை விட உங்கள் கையில் இங்கும் கூடுதல் தொகையை செலுத்தினால் எப்படி உங்கள் வட்டியை குறைக்கலாம் என்று கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள்.

கூடுதலாக செலுத்தும் தொகை  மொத்த வட்டி தொகை  வட்டி சேமிப்பு 
செலுத்த வேண்டிய EMI  Rs.11,428 Rs. 26,13,923 Rs. 0
மாதம் EMI Rs. 11,428 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் Rs. 3,32,310 Rs. 2,281,613
மாதம் EMI Rs.11,428 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் Rs. 5,95,357 Rs2,018,566
மாதம் EMI Rs. 11,428 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் Rs. 5,68,525 Rs. 2,045,398
மாதம் EMI Rs.11,428 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் Rs. 9,00,568 Rs. 1,713,355
மாதம் EMI Rs.11,428 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் Rs. 3,31,878 Rs. 2,282,045
மாதம் EMI Rs.11,428 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் Rs. 2,25,415 Rs. 2,388,508

 

70 லட்சம் வீட்டுக்கடனை இப்படியும் செலுத்தி வட்டியை குறைக்கலாம்…

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement