70 Lakh Home Loan Prepayment Calculator SBI
நம்மில் பலருக்கு சொந்த வீடு என்பது பெரிய கனவுகளில் ஒன்றாக இருக்கும். எப்படியாவது நமது கனவில்லத்தை கட்டிவிட வேண்டும் என்று எண்ணுவோம். இப்போதுள்ள விலைவாசி உயர்வில் நமது சேமிப்பை கொண்டு சொந்த வீடு கட்டுவது என்பது மிகவும் கடினம். வங்கியில் வீடு கட்டுவதற்கு லோன் வாங்கலாம் என்றால் அந்த தொகைக்கு, எவ்வளவு EMI செலுத்த வேண்டும். EMI செலுத்துவதால் வட்டி அதிகரிக்குமே என்ற குழப்பங்கள். கடன் வாங்கிட்டீர்கள் என்றால், EMI தொகை போக நாம் கையில் ஒரு தொகை உள்ளது அதையும் கடனில் காட்டினால் ஏதேனும் பலன் கிடைக்குமா, வட்டியில் மாற்றம் ஏற்படுமா, இப்படி நம்மில் பல கேள்விகள் எழும். இந்த கேள்விகள் நல்லதுதான் அப்போதுதான் நாம் திட்டமிட்டு நமது கடனை அடைக்க முடியும்.
அந்த வகையில் இன்று SBI வங்கியில் நீங்கள் வீடுகட்ட 70 லட்சம் ரூபாயை 30 வருடத்தில் EMI மூலம் கட்டுவது என்ற அடிப்படையில் கடன் வாங்கி இருப்பீர்கள். அப்படி கட்டும்போது உங்கள் வட்டி குறையாது உங்கள் வட்டியை குறைக்க, உங்கள் மாத EMI தொகையுடன் எவ்வளவு கட்டலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
SBI Home Loan 70 Lakh Prepayment Calculation:
கடன் தொகை மற்றும் வட்டி விகிதம்:
நீங்கள் SBI வங்கியில் கடனாக 70 லட்சத்தை தோராயமாக 9.15% வட்டிவிகிதத்திற்கு வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் கடனை மாத தவணைகள் மூலம் 30 வருடத்திற்கு கட்டவேண்டிவரும்.
2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் 20 லட்சம் வீட்டுக்கடன் வாங்கினால் இவ்வளவு தான் வட்டியா..?
கடனுக்கான EMI தொகை:
70 லட்சம் வீட்டு கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக ரூபாய் 57,081 வரை கட்ட வேண்டி இருக்கும்.
70 லட்சம் விட்டுக்கடனின் EMI & வட்டி விகிதம்:
இந்த EMI தொகையை விட உங்கள் கையில் இங்கும் கூடுதல் தொகையை செலுத்தினால் எப்படி உங்கள் வட்டியை குறைக்கலாம் என்று கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள்.
2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் 10 லட்சம் வீட்டுக்கடன் வாங்கினால் இவ்வளவு தான் வட்டியா..?
மாத மாதம் செலுத்தும் EMI தொகையை விட அதிகமாக செலுத்தினால் வட்டி எவ்வளவு குறையும்..?
| கூடுதலாக செலுத்தும் தொகை | மொத்த வட்டி தொகை | வட்டி சேமிப்பு |
| செலுத்த வேண்டிய EMI Rs.57,081 | Rs.1,35,49,061 | Rs. 0 |
| மாதம் EMI Rs. 57,081 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் | Rs. 52,50,881 | Rs. 82,98,180 |
| மாதம் EMI Rs.57,081 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் | Rs. 73,73,163 | Rs. 61,75,898 |
| மாதம் EMI Rs. 57,081 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் | Rs. 70,24,330 | Rs. 65,24,731 |
| மாதம் EMI Rs.57,081 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் | Rs. 90,55,025 | Rs. 44,94,036 |
| மாதம் EMI Rs.57,081 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் | Rs. 51,01,455 | Rs. 84,47,606 |
| மாதம் EMI Rs. 57,081 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் | Rs. 40,21,640 | Rs. 95,27,421 |
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














