SBI Personal Loan Interest Rate for 5 Lakhs
பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இந்த பதிவு இருக்கும். அப்படி என்ன பதிவு என்று யோசிப்பீர்கள். தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று SBI வங்கியில் தனிநபர் கடன் (Personal Loan) 5 லட்சம் பெற்றால் அதற்கு நாம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், நாம் வாங்கிய தொகைக்கு எவ்வளவு வட்டி விகிதம் இருக்கும் என்று தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
SBI Personal Loan in Tamil:
- தனிநபர் கடன் என்பது பல்வேறு வங்கிகள் மற்றும் NBFC -களால் வழங்கப்படும் நிதி உதவியின் ஒரு வடிவமாகும். இது மருத்துவ அவசரநிலைகள், உயர்கல்வி, திருமணச் செலவுகள், விடுமுறைத் திட்டங்கள் மற்றும் பல தனிப்பட்ட தேவைகளுக்கு வங்கிகளில் வழங்கப்படுகிறது.
- SBI வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிநபர் கடன்களை வழங்குகிறது. இந்த தனிநபர் கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடி நிதி தேவைப்படும் போது அவர்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும். SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான பயன்பாடுகளுடன் தனிநபர் கடன்களை வழங்குகிறது.
- SBI வழங்கும் தனிநபர் கடன்களுக்கான தற்போதைய வட்டி விகிதம் 11.15% வரை உள்ளது. இந்த வங்கியானது தனிநபர் கடனை அதிகபட்சமாக 20 லட்சம் வரை வழங்குகிறது.
- SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் அதிகபட்சம் 6 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
SBI Personal Loan 5 Lakh EMI Calculator in Tamil:
- சரி நீங்கள் இப்பொழுது SBI வங்கியில் தனிநபர் கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்டவேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
- அதுபோல நீங்கள் SBI வங்கியில் தனிநபர் கடன் 5 லட்சம் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?
SBI Personal Loan 5 Lakh EMI Calculator |
கடன் தொகை |
5 லட்சம் |
வட்டி விகிதம் |
11.15% |
EMI |
ரூ.10,909 |
கடன் செலுத்த வேண்டிய காலம் |
5 ஆண்டுகள் |
மொத்த வட்டி |
ரூ.1,54,519 |
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை |
ரூ.6,54,519 |
குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள வட்டி விகிதம், வட்டி தொகை மற்றும் EMI போன்றவை மாறுபடலாம். இவை ஒரு தோராய மதிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. வட்டி மாறுதல் மற்றும் கடன் தொகையை பொருத்தும் அணைத்து மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> |
Banking |