SBI வங்கியில் தனி நபர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

SBI Personal Loan Required Documents in Tamil

பொதுவாக அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் கடன் பெரும் நிலை ஏற்படும். அதாவது திருமணங்கள், கல்லூரிச் செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனி நபரிடம் இருந்தோ அல்லது வங்கிகளில் கடன் பெரும் நிலை ஏற்படுகிறது. அப்படி வங்கிகளில் பெறப்படும் கடன்களில் மிகவும் பிரபலமான கடன் எதுவென்றால் அது தனி நபர் கடன் தான். அப்படி நாம் பெரும் தனி நபர் கடனுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் SBI வங்கியில் தனி நபர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 SBI வங்கியின் கிரெடிட் கார்டு வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா

SBI Personal Loan Required Documents in Tamil:

SBI பல்வேறு வகையான தனிநபர் கடன்களைக் வழங்குகின்றது. இந்த கடன்களுக்கு நீங்கள் எளிதாக ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.

SBI தனிநபர் கடன்களின் வகைகள்:

  1. எஸ்பிஐ கவாச் தனிநபர் கடன்
  2. எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட்
  3. யோனோவில் முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்கள் (PAPL)
  4. எஸ்பிஐ விரைவான தனிநபர் கடன்
  5. எஸ்பிஐ ஓய்வூதிய கடன்

SBI தனிநபர் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:

  1. விண்ணப்பம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  2. வாக்காளர் அடையாள அட்டை
  3. ஆதார் அட்டை
  4. சொத்து வரி செலுத்திய ரசீது
  5. சொத்து பதிவு ஆவணம்
  6. ஓட்டுனர் உரிமம்

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 SBI -இல் Credit Card பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஓய்வூதியதாரர்களுக்கான தேவையான ஆவணங்கள்:

  1. விண்ணப்பம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  2. வாக்காளர் அடையாள அட்டை
  3. ஆதார் அட்டை
  4. வருமான வரி செலுத்திய ரசீது
  5. சொத்து பதிவு ஆவணம்
  6. ஓட்டுனர் உரிமம்
  7. ஓய்வூதியம் செலுத்தும் ஆணையின் நகல்

ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான தேவையான ஆவணங்கள்:

  1. விண்ணப்பம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  2. வாக்காளர் அடையாள அட்டை
  3. ஆதார் அட்டை
  4. ஓட்டுனர் உரிமம்
  5. பான் கார்டு
  6. கடவுச்சீட்டு
  7. முதலாளியிடமிருந்து கடிதம்
  8. முதலாளி வழங்கிய அடையாள அட்டை
  9. சமீபத்திய சம்பள சீட்டுகள் (3 மாதங்கள்)
  10. சமீபத்திய படிவம் 16 மற்றும் IT ரிட்டர்ன்ஸ்
  11. கடந்த 6 மாதங்களுக்கான சம்பள கிரெடிட்டை காட்டும் வங்கி கணக்கு அறிக்கை.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 SBI வங்கியின் Fixed Deposit வட்டி விகிதம்..! | Sbi Bank Interest Rates in Tamil

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement