SBI வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்.?

Advertisement

SBI Rd 1000 Per Month in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே நிறைய முக்கியமான கடமைகள் உள்ளது. அவற்றை எல்லாம் முடிப்பதற்கு செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அவ்வாறு நமது வாழ்க்கையின் மூலாதாரமாக உள்ள பணத்தை நாம் சேமித்து வைத்தால் மட்டுமே நமது அனைத்து கடமைகளையும் சரியாக செய்து முடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் சாதாரணமாக உங்கள் வீட்டிலேயே பணத்தை சேமித்து வைப்பதில் எந்த ஒரு பலனும் இல்லை. இதுவே நீங்கள் ஏதாவது போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் சேமிக்க தொடங்கினார்கள் என்றால் உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இன்றைய சூழலிலும் பலருக்கும் எந்த முறையில் சேமிப்பது என்பதை ஒரு பெரிய குழப்பம் உள்ளது. அந்த குழப்பத்தை சரிசெய்வதற்காக தான் இன்று SBI வங்கியின் RD திட்டத்தை 1,000 ரூபாய் சேமித்தால் நமக்கு எவ்வளவு வட்டி மற்றும் மெச்சூரிட்டி அமௌன்ட் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கி RD சேமிப்பு திட்டம்:

 SBI Rd in Tamil

சேமிப்பு தொகை:

நீங்கள் இந்த SBI வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.

இந்தியன் வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

வட்டி விகிதம்:

SBI வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.50% முதல் 7.50% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.

உதாரணமாக..

ஜென்ட்ரல் சிட்டிசன்:

இப்பொழுது நீங்கள் ஒரு ஜென்ட்ரல் சிட்டிசன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் SBI வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 1000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 6.50% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

அதாவது உங்களுக்கு மொத்தமாக 10,989 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு, நீங்கள் சேமித்த செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 70,989 ரூபாய் பெறுவீர்கள்.

கனரா வங்கியில் 6.5 லட்சம் Personal Loan பெற்றால் வட்டி மற்றும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா

சீனியர் சிட்டிசன்:

இப்பொழுது நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் SBI வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 1000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 7.00% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

அதாவது உங்களுக்கு மொத்தமாக 11,933 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு, நீங்கள் சேமித்த செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 71,933 ரூபாய் பெறுவீர்கள்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

SBI வங்கியில் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement