SBI-யில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா.?

Advertisement

SBI Bank Rd Scheme in Tamil

ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதை விட தரமானவற்றில் முதலீட்டு செய்ய வேண்டும்  நினைக்கின்றனர். ஆனால் எதில் முதலீடு செய்வது என்று தான் தெரியவில்லை. நாம் முதலீடு செய்வதற்கு முன் அதில் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று அறிந்து கொண்டு அதில் முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 1000 ரூபாய் மாதந்தோறும் செலுத்தி வந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று அறிந்து  கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Rd Calculator:

தகுதி:

இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

கட்டண தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையைக 100 ரூபாய் செலுத்தி முதலீடு செய்து கொள்ளலாம்.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தில் கால அளவு 10 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.

1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

ஜெனரல் சிட்டிசன்:

நீங்கள் SBI Rd திட்டத்தில் 1000 ரூபாய் மாதந்தோறும் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வட்டியாக 5.40% வழங்கப்படுகிறது. அப்போ நீங்கள் 5 வருடத்தில் 60,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டி தொகையாக 8,969 ரூபாய் வழங்கப்படுகிறது. முதலீடு மற்றும் வட்டி தொகை என சேர்த்து 68,969 ரூபாய் கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்:

இந்த திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் வட்டியாக 6.20% வழங்கப்படுகிறது. 5 வருடத்தில் 60,000 ரூபாய்  சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டி தொகையாக 10,431 ரூபாய் கிடைக்கும். முதலீடு மற்றும் வட்டி தொகை என சேர்த்து 70,431 ரூபாய் கிடைக்கும்.

குறிப்பு: உங்களின் டெபாசிட் தொகை மற்றும் முதிர்வு காலத்தை பொறுத்து வட்டி விகிதம், அசல் தொகை அனைத்தும் மாறுபடும்.

5 வருடத்தில் பிக்சட் டெபாசிட் திட்டம் மூலம் 2,77,249 ரூபாய் கிடைக்கக்கூடிய திட்டம் 

36,353 ரூபாய் வட்டி கிடைக்கும் அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement