SBI RD 1000 Scheme Interest Rate Calculator
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் பிறரின் உதவி இல்லாமல் சொந்தமாக நாமே வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் கண்டிப்பாக இவ்வாறு நினைக்கும் அத்துனை நபர்களும் வேலைக்கு செல்ல வேண்டும். சரி வேலைக்கு சென்றால் இவை பூர்த்தி ஆகி விடுமா என்று கேட்டால்..? அது தான் கிடையாது. ஏனென்றால் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து தேவைகளை பூர்த்தி செய்வது என்று மிகவும் நல்ல நடைமுறை. ஆனால் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் செலவு செய்து விட்டால் பிற்காலத்தில் யாரோ ஒருவரை நம்பி இருக்க வேண்டிய சூழல் உண்டாகுகிறது. இதுபேன்ற சூழல் வராமல் இருக்க வேண்டும் என்றால் சேமிப்பு என்ற பழக்கம் இருக்க வேண்டும். அதேபோல் இத்தகைய முறையில் நாம் மாதந்தோறும் சேமித்து வரும் பணம் நமக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எவ்வளவு அசல் தொகையாக கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அதனால் இன்று பாரத ஸ்டேட் வங்கியில் மாதம் 1000 ரூபாய் RD திட்டத்தில் சேமித்தால் அசல் மற்றும் வட்டி எவ்வளவு வரும் என்று தான் பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
State Bank RD Scheme:
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள RD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆனவர்கள் ஆகிய ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து சேமிக்க தொடங்கலாம்.
சேமிப்பு தொகை:
ஒரு நபர் இட்னஹ் திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக மாதம் 100 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம். மேலும் நிலையான சேமிப்பு தொகையினை நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் சேமித்தால் 19,211 வட்டியாக அளிக்கும் சேமிப்பு திட்டம்
வட்டி விகிதம்%:
இந்த வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு என்று 6.80% முதல் 7.35% வரை ஆண்டிற்கு வட்டி விகிதமாக அளிக்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் என்பது முதிர்வு காலத்தினை பொறுத்து அமையும்.
முதிர்வு காலம்:
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கான முதிர்வு காலம் 1 வருடம் முதல் 10 வருடம் வரை ஆகும்.
2 லட்சம் செலுத்தி 2,77,249 ரூபாயாக அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்
SBI RD Interest Rates 5 Years:
மேல் கூறிய அனைத்து விதி முறைகளுக்கும் உட்பட்டு ஒரு நபர் மாதம் 1000 ரூபாய் என்று 5 வருடத்திற்கு சேமித்து வந்தால் எவ்வளவு அசல் மற்றும் வட்டி கிடைக்கும்..?
எடுத்துக்காட்டாக:
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | Normal citizens | Senior citizens | ||
வட்டி தொகை (6.85%) | அசல் தொகை (7.35%) | வட்டி தொகை | அசல் தொகை | ||
1000 ரூபாய் | 5 வருடம் | 11,647 ரூபாய் | 71,647 ரூபாய் | 12,600 ரூபாய் | 72,600 ரூபாய் |
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |