SBI Bank RD Interest Rates 2023
எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பது ரொம்ப முக்கியமானது. அதனால் நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்திலிருந்து கொஞ்சமாவது எடுத்து சேமியுங்கள். சேமிப்பதற்கான திட்டங்களை நம் பதிவில் தினந்தோறும் பதிவிட்டு வருகிறோம். நீங்கள் திட்டங்களில் சேமிப்பதற்கு முன்னர் அதில் உள்ள வட்டி தொகை, டெப்பாசிட் தொகை போன்றவற்றை அறிந்து கொண்ட பிறகு சேமிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் சேமித்த பிறகு அதற்கு இவ்வளவு தான் வட்டி என்றால் வேறு எதிலாவது முதலீடு செய்திருக்கலாமோ என்று தோன்றும். அதனால் தான் இந்த பதிவில் SBI வங்கியில் உள்ள RD திட்டத்தில் 2000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெறித்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI RD திட்டத்தில் 2000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள RD திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக மாதம் 100 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.
SBI வங்கியில் 1000 ரூபாய்க்கு வட்டியாக 12,600 ரூபாய் கிடைக்கும் சேமிப்பு திட்டம்..!
வட்டி விகிதம்%:
SBI வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு என்று 5.00% முதல் 6.20% வரை ஆண்டிற்கு வட்டி விகிதமாக அளிக்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் என்பது முதிர்வு காலத்தினை பொறுத்து அமையும்.
டெபாசிட் காலம் | Normal citizens | Senior citizens |
1 வருடம் – 1 வருடம் 364 நாட்கள் | 5.00% | 5.50% |
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.10% | 5.60% |
3 ஆண்டுகள் – 4 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.30% | 5.80% |
5 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் | 5.40% | 6.20% |
முதிர்வு காலம்:
நீங்கள் இந்த திட்டத்தில் முதிர்வு காலமாக 1 வருடம் முதல் 10 வருடம் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் 2000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்:
டெபாசிட் விபரம் | Normal citizens | Senior citizens |
டெபாசிட் தொகை | Rs.2000/- | Rs.2000/- |
வட்டி | 5.40% | 6.20% |
வட்டி தொகை | Rs.17,943/- | Rs.20,866/- |
5 வருடத்தில் சேமிக்கப்பட்ட தொகை | Rs.1,20,000/- | Rs.1,20,000/- |
டெபாசிட் காலம் | 5 வருடம் | 5 வருடம் |
முதிர்வு தொகை | Rs.1,37,943/- | Rs.1,40,866/- |
இந்தியன் வங்கியில் மாதம் 1000 செலுத்தினால் 5,58,763 ரூபாய் கிடைக்கக்கூடிய சூப்பர் திட்டம்….
3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |