SBI RD Interest Rate For Senior Citizen 2023 in Tamil
வங்கிகளில் பல விதமான கடன்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியிலும் கடனிற்கான வடிவிகிதம் என்பது மாறுபடும். அந்த வகையில் SBI வங்கியில் வழங்கப்படும் RD திட்டத்திற்கான வட்டி விகிதம் எவ்வளவு என்பதை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. நாம் அனைவருமே ஏதோவொரு தேவைக்காக வங்கியில் கடன் வாங்க நினைப்போம். ஆனால் கடன் வங்குவதற்கு முன் நாம் வாங்கும் கடனிற்கான வட்டி விகிதம் எவ்வளவு..? மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..? உள்ளிட்ட பல விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். ஓகே வாருங்கள் SBI வங்கியில் RD திட்டத்திற்கான வட்டிவிகிதம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
டெபாசிட் தொகை:
SBI வங்கியின் RD திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
கால அளவு:
SBI வங்கியின் RD திட்டத்தில் நீங்கள் 6 மாதம் முதல் 10 வருடம் வரையிலான கால அளவை தேர்வு செய்து டெபாசிட் செய்யலாம்.
வட்டி விகிதம்:
கால அளவு | ஜென்ரல் சிட்டிசன் | சீனியர் சிட்டிசன் |
1 வருடம் முதல் 1 வருடம் 364 நாட்கள் வரை | 6.80% | 7.30% |
2 வருடம் முதல் 2 வருடம் 364 நாட்கள் வரை | 7.00% | 7.50% |
3 வருடம் முதல் 4 வருடம் 364 நாட்கள் வரை | 6.50% | 7.00% |
5 வருடம் முதல் 10 வருடம் வரை | 6.50% | 7.00% |
சீனியர் சிட்டிசன் வட்டி தொகை:
அதுவே நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசனாக இருந்து, SBI வங்கியின் RD திட்டத்தில் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் 5000 ரூபாய் டெபாசிட் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 7.30% வட்டி விகிதம் வழங்கபடுகிறது.
எனவே 7.30% வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது 1 வருடத்தில் உங்களுக்கு மொத்த வட்டி தொகையாக 2,412 ரூபாய் வழங்கபடுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டித்தொகை சேர்த்து மொத்தமாக 62,412 ரூபாயினை பெறுவீர்கள்.
உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |