Special Fixed Deposit 400 Days Interest Rate Calculator
மக்கள் அனைவருக்கும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பணத்தினை எவ்வாறு சேமிப்பது என்றும், எத்தகைய முறையினை பின்பற்றுவதும் என்ற விவரங்கள் தான் தெரியாமல் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் சேமிப்பதற்கு முன்பாக நாம் ஒரு திட்டத்தின் வெளிக்கருத்துகளை மட்டும் பார்க்கலாம் அதில் காணப்படும் நன்மை, தீமை பற்றியும் சிந்திப்பது நல்லது. ஏனென்றால் அப்போது தான் அதில் நமக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் சேமித்த தொகைக்கான வட்டி மற்றும் அசலாக எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். ஆகவே நீங்கள் ஒரு திட்டத்தின் கீழ் சேர்ந்த சேமிக்கப்போகிறீர்கள் என்றால் முதலில் அனைத்தினையும் திட்டமிட்டு செய்யுங்கள். அதனால் இன்று ஒரு உதாரணத்திற்கு இந்தியன் வங்கியில் உள்ள ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாய் அசல் தொகையாக கிடைக்கும் என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Indian Bank Special FD Scheme:
சேமிப்பு காலம்:
இந்தியன் வங்கியில் அறிமுகம் செய்து உள்ள இந்த திட்டத்திற்கான சேமிப்பு காலம் என்பது 400 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் குறுகிய காலத்திலேயே நிலையான ஒரு தொகையினை பெற முடியும்.
1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 44,995/- அளிக்கும் SBI வங்கியின் அசத்தலான சேமிப்பு திட்டம்
சேமிப்பு தொகை:
வட்டி விகிதம்%:
இந்த திட்டத்தினை பொறுத்தவரை வட்டி விகிதம் என்பது பொதுமக்கள், சீனியர் சிட்டிசன் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன் என்ற முறையில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
- சூப்பர் சீனியர் சிட்டிசன்- 8.00%
- சீனியர் சிட்டிசன்- 7.75%
- பொதுமக்கள்- 7.25%
1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 39,750 ரூபாய் இந்தியன் பேங்க் சேமிப்பு திட்டம்
இத்திட்டத்தில் எவ்வளவு சேமித்தால் எவ்வளவு ரூபாய் கிடைக்கும்:
மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளின் படி ஒரு நபர் 3 மற்றும் 5 லட்சம் ரூபாயினை முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு தொகை | Normal Citizen | Senior Citizen | Super Senior Citizen | |||
வட்டி | அசல் | வட்டி | அசல் | வட்டி | அசல் | |
3,00,000 ரூபாய் | Rs.23916 | Rs.3,23,916 | Rs.25,571 | Rs.3,25,571 | Rs.26,399 | Rs.3,26,399 |
5,00,000 ரூபாய் | Rs.3986 | Rs.5,39,861 | Rs.42,619 | Rs.5,42,619 | Rs.43,999 | Rs.5,43,999 |
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |