400 நாட்களில் Rs.5,42,000/- தரும் அம்ரித் கலாஷ் சேமிப்பு திட்டம்..! State Bank of India New Update for Amrit Kalash FD Scheme..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அம்ரித் கலாஷ் எனப்படும் பிக்சட் டெபாசிட் ஸ்கீமை 30 ஜூன் 2023 வரைக்கும் நீட்டித்துள்ளனர். ஆக இந்த திட்டம் குரித்த விவரங்களை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
அம்ரித் கலாஷ் சேமிப்பு திட்டம்:-
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அம்ரித் கலாஷ் என்ற பெயரில் ஒரு புதிய ஸ்கீமை பிப்ரவரி 15, 2023-யில் அறிமுகம் செய்திருந்தனர் இந்த ஸ்கின் மார்ச் 31, 2023 வரை தான் செயல்படும் என்று சொல்லி இருந்தன, ஆனால் இந்த ஸ்கீமை 30 ஜூன் 2023 வரைக்கும் நீட்டித்துள்ளனர.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1800 சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அஞ்சலகத்தில் அசத்தலான திட்டம்..!
கால அளவு:
இந்த அம்ரித் கலாஷ் ஸ்கீமின் கால அளவு 400 நாட்கள். ஆக நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்கின்றீர்களோ அந்த தொகை மற்றும் அதற்கான வட்டியை 400 நாட்களுக்கு பிறகு நீங்கள் மொத்தமாக திரும்ப பெறலாம்.
இந்த ஸ்கீமினுடைய வட்டியை நீங்கள் மாதம் மாதம் பெறலாம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம், ஒரு வருடத்திற்கு ஒரு முறை அல்லது 400 நாட்கள் முடிந்த பிறகு பெறலாம் அது உங்களுடைய விருப்பம்.
முதலீடு தொகை:
இத்திட்டத்தில் இனிய விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 2 கோடி வரை டெபிசிட் செய்யலாம்.
வட்டி:
பொது பிரிவினருக்கு இந்த திட்டத்தில் 7.10% வட்டி வழங்கபடுகிறது.
அதுவே மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டி வழங்கப்படுகிறது.
எப்படி இந்த திட்டத்தில் இணைவது?
இந்த அம்ரித் கலாஷ் சேமிப்பு திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் SBI வங்கியில் நேரடியாக சென்று இணையலாம், அல்லது SBI Net Bank மூலமாக இணையலாம்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த அம்ரித் கலாஷ் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் பொது பிரிவினருக்கு கிடைக்க கூடிய மெச்சுரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும் என்றால் முதலீடு செய்த தொகை 5 லட்சம் மற்றும் அதற்கான வட்டி 40,029 ரூபாய் இரண்டியும் சேர்த்து 5,40,029 ரூபாய் மெச்சுரிட்டி தொகையாக கிடைக்கும்.
மூத்த குடிமக்களாக இருந்தால் அவர்களுக்கு மெச்சுரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும் என்றால் முதலீடு செய்த தொகை 5 லட்சம் மற்றும் அதற்கான வட்டி 42,938 ரூபாய் இரண்டியும் சேர்த்து 5,42,938 ரூபாய் மெச்சுரிட்டி தொகையாக கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Banking |