Suryoday Small Finance Bank launches Blossom Women’s Savings Account
Blossom Women’s Savings Account Benefits – பொதுவாக பெண்களுக்கு பலவகையான சிறப்பு திட்டங்களை வழங்குகின்றன. அந்த அந்த வகையில் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பெண்களுக்கு பிளாசம் சேமிப்பு கணக்கை அறிமுகம் செய்துள்ளது அது குறித்த தகவல்களை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பிளாசம் மகளிர் சேமிப்பு கணக்கில் (Blossom Women’s Savings Account) மாதம் ஒரு முறை வட்டி வரவு வைக்கப்படும். சேமிப்பு கணக்கிற்கு ஒவ்வொரு ஆண்டும் 7% வட்டி வழங்கப்படும். சேமிப்பு கணக்குடன், ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு வழங்கப்படும். இதனை பயன்படுத்தி ஆன்லைன் மற்றும் பிற பொருட்கள் ஷாப்பிங்கிற்கு பயன்படுத்தி சிறப்பு சலுகைகளை பெறலாம்.
பெண்கள் தங்களுடைய பணத்தைச் சிறந்த வட்டி விகிதத்தில் சேமித்து பணத்தை அதிகரிக்க பாதுகாப்பான தளத்தை வழங்குவதற்காக இந்தக் கணக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சரி இந்த பிளாசம் மகளிர் சேமிப்பு கணக்கின் நன்மைகளை பற்றி இப்பொழுது அறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023-ல் Indian வங்கியில் தனிநபர் கடன் 15 லட்சம் ரூபாய் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?
பிளாசம் மகளிர் சேமிப்பு கணக்கு நன்மை – Blossom Women’s Savings Account Benefits:
தனித்துவமான மற்றும் இலவச ரூபே டெபிட் கார்டு பயன்படுத்தி பெண் வாடிக்கையாளர்கள் பல்வேறு சலுகைகளை பெறலாம்.
மாதந்தோறும் வட்டி, சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
குழந்தைக்கும் ஒரு சேமிப்பு கணக்கை துவங்கலாம்.
இருசக்கர வாகன லோன் செயலாக்க கட்டணத்தில் சலுகை கிடைக்கும். இருப்பினும் அது குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே.
தேவையை பொறுத்து வீட்டிற்கே வங்கி சேவை வழங்கப்படும்.
டெபிட் கார்டு வகையை பொறுத்து காப்பீடு பொருந்தும்.
சராசரி மாத இருப்பு ரூ.10,000/- மட்டும்.
சினிமா இலவச டிக்கெட் அல்லது ஸ்பா, சலூனுக்கு பயன்படுத்தும் கூப்பன் கிடைக்கும்.
இதுதவிர, சூரியோதய் வங்கி, உஜ்வால், ஆதித்யா, கிளாசிக், சுப்ரீம், ஹெல்த் அண்டு வெல்னெஸ், அடிப்படை சேமிப்பு கணக்கு சேவைகளையும் வழங்குகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |