Personal Loan in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! அனைவருக்கும் இன்றைய பதிவின் வாயிலாக பயனுள்ள தகவலை தான் கூறப்போகிறேன். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். அனைவருமே வசதியானவர்கள் என்று சொல்ல முடியாது அல்லவா..! அதனால் நமக்கு ஏதாவது பணக்கஷ்டம் ஏற்பட்டால் நாம் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் வாங்கி கொள்வோம்.
அதுவே அவர்களிடமும் பணம் இல்லாத பட்சத்தில் நமக்கு குறைந்த வட்டியில் பணம் கொடுத்து உதவுவது வங்கி மட்டும் தான். அனைத்து வங்கிகளும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தனிநபர் கடன்களை வழங்கி வருகிறது. அதுபோல நீங்கள் வங்கியில் தனிநபர் கடன் வாங்க போகிறீர்களா..? அப்படி என்றால் இந்த விஷயத்தை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்..!
👉வீட்டு கடன் வாங்க போறீங்களா.. அப்போ இந்த விஷயத்தை முதலில் தெரிஞ்சிக்கோங்க
தனிநபர் கடன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
கடன் தொகை:
தனிநபர் கடனை எடுப்பதற்கு முன் நீங்கள் கடன் வாங்க விரும்பும் கடன் தொகையை தீர்மானிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதுபோல நீங்கள் விரும்பிய கடன் தொகையை தேர்வு செய்து, கடன் தொகை மற்றும் நீங்கள் கடனைப் பெறும் காலத்தின் அடிப்படையில் சமமான மாதாந்திர தவணை (EMI) -களை கணக்கிடுவது முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடன் திருப்பிச் செலுத்தும் காலம்:
பொதுவாக நீங்கள் வாங்கும் கடனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி செலுத்தத் தவறினால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் ஒரு மோசமான அடையாளத்தை ஏற்படுத்தலாம். அதாவது தனிநபர் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும். அதனால் நீங்கள் கடன் பெறும் முன் அந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை கணக்கிட வேண்டும்.
👉 தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா
கடன் மதிப்பெண்:
அதுபோல கிரெடிட் ஸ்கோர் அல்லது CIBIL ஸ்கோர் என்பது தனிநபர் கடனுக்கான உங்கள் தகுதியின் முக்கிய குறிகாட்டியாகும். அதனால் தனிநபர் கடனைப் பெறுவதற்கு முன், உங்கள் கிரெடிட் அல்லது CIBIL ஸ்கோரைச் சரிபார்ப்பது முக்கியம்.
வட்டி விகிதங்கள்:
பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டியை வழங்குவதில்லை. ஒவ்வொரு வங்கிகளும் தனிநபர் கடனுக்கு ஒவ்வொரு விதமான வட்டியை வழங்குகிறது. அதனால் எங்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
👉 கனரா வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு. இனி அனைத்து கடன்களின் EMI -யும் அதிகரிக்கும்
EMI கணக்கீடுகள்:
நீங்கள் தனிநபர் கடனைப் பெறுவதற்கு முன், நீங்கள் வாங்கும் கடனுக்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான விஷயமாகும். மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரிந்து கொண்டால், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கு உங்களுக்கு வசதியாக இருக்கும்.
மேலும் இவை அனைத்திற்கும் மேல் உங்களுடைய வருமானத்தை நினைவில் கொள்ள வேண்டும். இவை தான் தனிநபர் கடன் வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியான விஷயங்கள்.
ஒவ்வொரு வங்கியிலும் தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடன் எதில் வட்டி அதிகம் தெரியுமா |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |