Home Loan in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் வீடு கட்டுவதும் ஓன்று. இன்றைய நிலையில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது பலருடைய ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. காரணம் வீடு கட்டுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. வீடு கட்டுவதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் தான் நமக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் வீட்டு கடன்களை வழங்கி வருகிறது.
அப்படி வீட்டு கடன் வாங்கி நம்முடைய கனவை நினைவாக்கி கொள்ளலாம். உடனே சிலருக்கு வங்கிகளில் கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI கட்ட வேண்டும் அதுபோல வட்டியும் அதிகமாக இருக்கும் என்று பயப்படுவீர்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் வங்கிகளில் நாம் வாங்கும் கடன்களுக்கு எவ்வளவு EMI மற்றும் வட்டி கட்ட வேண்டும் என்று பதிவிட்டு வருகிறோம். அதுபோல இன்றைய பதிவில் வீட்டு கடன் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
👉 தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா
வீட்டு கடன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
வட்டி எவ்வளவு : முதலில் நீங்கள் வீட்டு கடன் வாங்க போகிறீர்கள் என்றால், நீங்கள் வாங்கும் வங்கியில் வீட்டு கடனுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு வங்கிக்கும் வீட்டு கடனின் வட்டி விகிதம் மாறுபடும். அதனால் எங்கு வட்டி விகிதம் குறைவாக இருக்கிறதோ அங்கு நீங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
உங்களுடைய சம்பளம் எவ்வளவு : அதுபோல நீங்கள் வீட்டு கடன் வாங்கும் முன் நீங்கள் வாங்கும் சம்பளத்தை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கடனை வாங்கினால் மாதாமாதம் நம்மால் EMI கட்ட முடியுமா என்று யோசித்து பார்ப்பது நல்லது. அதனால் உங்களுடைய மாத வருமானத்தை நினைவில் கொள்ளுங்கள்.
👉 கனரா வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு. இனி அனைத்து கடன்களின் EMI -யும் அதிகரிக்கும்
கடனை திருப்பி செலுத்தும் காலம் : அடுத்து நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கும் போது அந்த கடனை எத்தனை வருடத்தில் உங்களால் திருப்பி செலுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல குறிப்பிட்ட காலத்தில் உங்களால் கடனை திருப்பி செலுத்த முடியாத கடன்களை வாங்கவே கூடாது.
திருப்பிச் செலுத்த இயலாமை : வீட்டுக் கடனைப் பெறுவதற்கு முன், உங்கள் எதிர்கால நிதி நிலைமையை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஏனெனில், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும். அதுபோல நீங்கள் மாதாந்திர தவணைகளைத் திருப்பி செலுத்த தவறிவிட்டால், கடன் வழங்குபவர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து உங்கள் சொத்தை விற்று நிலுவைத் தொகையைப் பெறலாம்.
ஒவ்வொரு வங்கியிலும் தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடன் எதில் வட்டி அதிகம் தெரியுமா |
வீட்டுக் கடன் காப்பீடு : வீட்டுக் கடன் காப்பீடு அல்லது லோன் கவர் டேர்ம் அஷ்யூரன்ஸ் என்பது கடன் பெற்றவருக்கு துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் ஒரு வகையான காப்பீட்டுத் திட்டமாகும். இதனால் காப்பீட்டு நிறுவனம் வாங்கிய கடன் நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தும். இது உங்கள் குடும்பம், செலுத்தப்படாத நிலுவைத் தொகையின் நிதிச் சுமையை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதி செய்கிறது.
ICICI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள் அப்போ இந்த முக்கிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |