Credit Cards Things to Know in Tamil
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மக்களில் பலபேர் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கிரெடிட் கார்டு பலதரப்பு மக்களிடம் முக்கிய நிதி ஆதாரமாகவே மாறிவிட்டது. அனைத்து வங்கிகளும் போட்டி போட்டுகொண்டு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அப்படி வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கும் மக்கள் அதை சரியாக பயன்படுத்துகிறார்களா.? என்று கேட்டால் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலபேர் அதை பற்றி சரியாக தெரியாமலே பயன்படுத்தி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கிரெடிட் கார்டு பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கும் போது சில விஷயங்களை நாம் கண்டிப்பாக தெரிந்து கொண்டு பிறகு தான் கடன் வாங்க வேண்டும். எனவே கடன் வாங்கும் போது கிரெடிட் கார்டு பற்றிய சில விவரங்ளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றால் வட்டி 12 சதவீதம் முதல் 20 சதவீதத்திற்கும் அதிகமாக வட்டி நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் 1 லட்சம் கடன் பெற்றால் அதை திருப்பி செலுத்தும் காலம் 24 மாதங்கள் என கணக்கிடப்படுகிறது.
எனவே ஒருவர் வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் 1 லட்சம் கடன் பெற்றால் 24,034 ரூபாய் வட்டியாக செலுத்தவேண்டும். மேலும் இதற்கு செயலாக்க கட்டணம் என்று 1,800 ரூபாயும், வட்டிக்கு சேவை வரியாக 4,326 ரூபாயும் மற்றும் கட்டணத்திற்கு 324 ரூபாயும் கட்ட வேண்டும். ஆகவே 1 லட்சம் பெற்ற கடனுக்கு அவர் 24 மாதங்களில் மொத்தமாக ரூ.1,30,484 செலுத்த வேண்டும். அதாவது நம் வருமானத்தை முன் கூட்டியே செலவு செய்கிறோம். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கி விட்டு அதை கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராத தொகை, தாமத கட்டணம் என பல வழிகளில் அதிகமான பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.அதுமட்டுமில்லாமல், கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்த தொகையை அதன் கெடு தேதி முடிவதற்குள் செலுத்தவில்லை என்றால் ஆண்டுக்கு 36 சதவீதம் வரை வட்டி கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் நீங்கள் கடன் பெறுவதற்கான தகுதியான சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு வேறு எந்த கடனும் எடுக்க முடியாமல் போய் விடும்.
எனவே கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கிரெடிட் மூலம் பணம் எடுத்த அடுத்த நிமிடத்திலிருந்தே வட்டி கணக்கிடப்படுகிறது.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |