Types of Indian Bank Credit Card in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவருக்குமே ஏதாவது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கினை வைத்திருப்போம். அப்படி நாம் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகள் நமக்கு பல வகையான சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்களை அளிக்கின்றன. அவ்வாறு நமக்கு அளிக்கப்படும் பல வகையான சலுகைகளில் ஒன்று தான் இந்த கிரெடிட் கார்டு. இப்படி வங்கியில் இருந்து நமக்கு அளிக்கப்படும் கிரெடிட் கார்டு பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதே இல்லை. அப்படி நமக்கு கிரெடிட் கார்டு பற்றி தெரிந்திருந்தாலும் அதில் எந்த வகையான கிரெடிட் கார்டினை தேர்வு செய்வது. அப்படி நாம் தேர்வு செய்யும் கிரெடிட் கார்டினை வாங்குவதற்கு என்னென்ன விதிமுறைகள் மற்றும் நாம் தேர்வு செய்யும் கிரெடிட் கார்டினால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கும் போன்றவற்றை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். அதனால் இன்று இந்தியன் வங்கியில் அளிக்கப்படும் கிரெடிட் கார்டுகளை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி கிரெடிட் கார்டு வகைகள்:
- Bharat Credit Card
- Gold Credit Card
- Platinum Credit Card
- Business Credit Card
இவையே இந்தியன் வங்கியில் உள்ள மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான கிரெடிட் கார்டுகள் ஆகும்.
1.Bharat Credit Card:
இந்தியன் வங்கி கிரெடிட் கார்டுகளிலேயே இந்த Bharat Credit Card தான் மிகவும் சிறப்பானது என்று கூறலாம். ஏனென்றால் இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெறுவதற்காக எந்த வித தொகையும் செலுத்த தேவையில்லை.
அதே போல் ஒருவேளை நீங்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த தொகையை திருப்பி செலுத்துவதற்கு கால தாமதம் ஆகிவிட்டாலும் அதற்காக உங்களிடம் 50 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.
அதே போல் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த தொகைக்கு உங்களிடம் மாதம் 1.79% வட்டியும் வருடத்திற்கு 21.48% வட்டியும் வசூலிக்கப்படுகிறது.
இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெறவேண்டும் என்றால் நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு குறைந்தபட்சம் 25 வயதும் அதிகபட்சம் 60 வயதும் இருக்க வேண்டும். மேலும் இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 5,000 ரூபாய் வருமானம் இருந்தாலே போதும்.
SBI வங்கியின் சிறந்த கிரெடிட் கார்டு என்னென்ன தெரியுமா
2. Gold Credit Card:
நாம் அடுத்து பார்க்க இருக்கும் இந்த Gold Credit Card-ம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகளை அளிக்கின்றது. அதாவது இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெறுவதற்காக எந்த வித தொகையும் செலுத்த தேவையில்லை.
அதே போல் ஒருவேளை நீங்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த தொகையை திருப்பி செலுத்துவதற்கு கால தாமதம் ஆகிவிட்டாலும் அதற்காக உங்களிடம் 250 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.
அதே போல் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த தொகைக்கு உங்களிடம் மாதம் 1.99% வட்டியும் வருடத்திற்கு 23.88% வட்டியும் வசூலிக்கப்படுகிறது.
இந்த கிரெடிட் கார்டினை நீங்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெற வேண்டும் என்றால் நீங்கள் இந்திய குடிமகனாக அல்லது NRI- யாக இருக்க வேண்டும்.
மேலும் உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 80 வயதும் இருக்க வேண்டும். மேலும் இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 12,500 ரூபாய் வருமானம் இருந்தாலே போதும்.
3. Platinum Credit Card:
இந்தியன் வங்கியின் இந்த Platinum கிரெடிட் கார்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகளை அளிக்கின்றது. அதாவது இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெறுவதற்காக எந்த வித தொகையும் செலுத்த தேவையில்லை.
இந்த Platinum கிரெடிட் கார்டில் மற்ற கார்டுகளை காட்டிலும் ஒரு சிறப்பான வசதி அதாவது இதில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது இதில் EMI வசதி உள்ளது.
அதே போல் ஒருவேளை நீங்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த தொகையை திருப்பி செலுத்துவதற்கு கால தாமதம் ஆகிவிட்டாலும் அதற்காக உங்களிடம் 250 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.
அதே போல் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த தொகைக்கு உங்களிடம் மாதம் 1.99% வட்டியும் வருடத்திற்கு 23.88% வட்டியும் வசூலிக்கப்படுகிறது.
இந்த கிரெடிட் கார்டினை நீங்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெற வேண்டும் என்றால் நீங்கள் இந்திய குடிமகனாக அல்லது NRI- யாக இருக்க வேண்டும்.
மேலும் உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 80 வயதும் இருக்க வேண்டும். மேலும் இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 12,500 ரூபாய் வருமானம் இருந்தாலே போதும்.
இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள் இது தானா
4. Business Credit Card:
இந்த Business கிரெடிட் கார்டு பொதுவாக வணிகம் செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுவோ தனது பல வகையான சலுகைகளை அளிக்கின்றது. அதாவது இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெறுவதற்காக எந்த வித தொகையும் செலுத்த தேவையில்லை.
அதே போல் ஒரு வேளை நீங்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த தொகையை திருப்பி செலுத்துவதற்கு கால தாமதம் ஆகிவிட்டாலும் அதற்காக உங்களிடம் 250 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.
அதே போல் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த தொகைக்கு உங்களிடம் மாதம் 1.99% வட்டியும் வருடத்திற்கு 23.88% வட்டியும் வசூலிக்கப்படுகிறது.
இந்த கிரெடிட் கார்டினை கார்ப்பரேட்டுகள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவை பெறமுடியும்.
மேலும் இந்த கிரெடிட் கார்டை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்கள் நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் வருமானம் இருக்க வேண்டும்.
இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு வைத்து இருப்பவரா நீங்கள் அப்போ இதை தெரிந்துக்கொள்ளுங்கள்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |