FD -க்கு அதிக வட்டி வழங்கும் 3 முக்கிய வங்கிகள் எது தெரியுமா..?

Advertisement

Highest Interest On Fixed Deposits in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தேவை என்பது கட்டாயம் இருக்கும். சில நேரங்களில் நமக்கு பணத்தேவை ஏற்பட்டால் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் வாங்கி கொள்வோம். அதுவே அவர்களிடமும் பணம் இல்லையென்றால் உடனே நம் நம்பிக்கையுடன் செல்வது வங்கிக்கு தான். அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பலவகையான கடன்களை வழங்கி வருகிறது. அதுபோல நாமும் வங்கிகள் பற்றிய பல தகவல்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பிக்சட் டெபாசிட்க்கு (FD) அதிக வட்டி வழங்கும் 3 முக்கிய வங்கிகள் எது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

FD -க்கு அதிக வட்டி வழங்கும் 3 முக்கிய வங்கிகள் எது..? 

பெரும்பாலும் நம்மில் பலரும் தங்கள் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்கிகளில் நிலையான வைப்புத் திட்டங்களைத் (Fixed Deposit) தான் தேர்வு செய்கிறார்கள்.

இதன் காரணமாக தான் அனைவரும் வங்கிகளில் Fixed Deposit இல் பணத்தை முதலீடு செய்கிறார்கள். மேலும் Fixed Deposit -க்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் Fixed Deposit -க்கு அதிக வட்டி எந்த வங்கியில் வழங்கப்படுகிறது தெரியுமா 

ஒவ்வொரு வங்கியிலும் Fixed Deposit -க்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் Fixed Deposit -க்கு அதிக வட்டி வழங்கும் 3 முக்கிய வங்கிகள் எது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.

State Bank of India: 

State Bank of India

SBI வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு Fixed Deposit கணக்கிற்கு அதிக வட்டியை வழங்கி வருகிறது. பொது மக்களுக்கு FD கணக்கிற்கு 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதுபோல, மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

👉 போஸ்ட் ஆபிஸ் FD Vs வங்கி FD இரண்டில் வட்டி எதில் அதிகம் தெரியுமா

Punjab National Bank: 

Punjab National Bank

பஞ்சாப் நேசனல் வங்கியானது 2 கோடிக்கும் குறைவான FD கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. பொது FD கணக்குகளுக்கு 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதுபோல மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 444 நாட்கள் கொண்ட FD கணக்குகளுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 666 நாட்கள் வரை உள்ள FD கணக்கிற்கு 7.55 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.85 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

Bank Of Baroda: 

Highest Interest On Fixed Deposits in Tamil

பேங்க் ஆப் பாரோடா வங்கியானது சமீபத்தில் அதன் வட்டி விகிதத்தை அதிகரித்தது.  அதனால் FD கணக்கிற்கு 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதுபோல மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 2 கோடிக்கும் குறைவான 7 நாள் முதல் 399 நாட்கள் வரை FD கணக்குகளுக்கு இந்த வட்டி விகிதம் தான் வழங்கப்படுகிறது.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement