Which Bank Is Best For Personal Loan 2025 in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது என்பதை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகின்றோம். பொதுவாக அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அப்படி வங்கிகள் வழங்கும் கடன்களில் தனிநபர் கடனும் ஓன்று. பெரும்பாலும் மக்களால் அதிகம் வாங்கும் கடன் என்றால் அது தனிநபர் கடன் தான். சரி வாங்க நண்பர்களே தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது என்று தெரிந்து கொள்ளலாம்..!
தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது..?
மக்கள் அனைவருமே வீட்டு கடன் வாங்குவதற்கு பதிலாக தனிநபர் கடன் தான் வாங்குகிறார்கள். அதுபோல தனிநபர் கடன்களின் வட்டி விகிதமானது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுகிறது. அப்படி ஒவ்வொரு வங்கிக்கும் தனிநபர் கடனின் வட்டி விகிதம் எவ்வளவு வேறுபடுகிறது என்று பார்க்கலாம் வாங்க..!
HDFC Bank: தனிநபர் கடன் வழங்கும் வங்கிகளில் HDFC வங்கியானது முதலிடத்தில் இருக்கிறது. HDFC வங்கியானது வருடத்திற்கு 10.90 – 24% வரை தனிநபர் கடனுக்கு வட்டிவிகிதத்தை வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வங்கியில் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கனரா வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு. இனி அனைத்து கடன்களின் EMI -யும் அதிகரிக்கும்
State Bank Of India: SBI வங்கியானது 2 வகையான தனிநபர் கடன்களை வழங்குகிறது. ஓன்று எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடன், மற்றொன்று தனிநபர் கடன். இதில் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடனுக்கு 10.30% முதல் வட்டி வழங்கப்படுகிறது. அதுபோல தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 10.30% – 15.30% வரை வழங்கப்படுகிறது. 21 – 76 வயது வரையில் வாங்கிக் கொள்ளலாம்.
Canara Bank: கனரா வங்கியிலும் 2 வகையான கடன்கள் வழங்கப்படுகிறது. ஓன்று Teachers பர்சனல் லோன், மற்றொன்று பட்ஜெட் பர்சனல் லோன் ஆகும். Teachers தனிநபர் கடனுக்கு வருடத்திற்கு 12.65% வரை வட்டை வழங்கப்படுகிறது. அதுபோல பட்ஜெட் பர்சனல் கடனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 10.09 – 16.25% வரை வழங்கப்படுகிறது.
Indian Overseas Bank: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனிநபர் கடனின் வட்டி விகிதமானது வருடத்திற்கு 10.50% முதல் தொடங்குகிறது. இந்த வங்கியில் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
IDBI Bank: ஐடிபிஐ வங்கியில் தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 11.00% முதல் 15.50% வரை வசூலிக்கப்படுகிறது.
Indusind Loan: இண்டஸ்இண்ட் வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டியானது 10.49% முதல் ஆரம்பிக்கிறது.
Axis Bank: ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டியானது 11.25 வட்டி ஆக வசூலிக்கப்படுகிறது.
ICICI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள் அப்போ இந்த முக்கிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |