Fixed Deposit Interest Rate
வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் பணத்தேவை என்பது ஏற்படும். அந்த நேரத்தில் நாம் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் பெற்றுக் கொள்வோம். அதுவே அவர்களிடமும் இல்லையென்றால் வட்டிக்கு கடன் வாங்குவோம். ஆனால் அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் நோக்கத்தில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. நாமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல Fixed Deposit -க்கு அதிக வட்டி எந்த வங்கியில் வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Fixed Deposit -க்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது..?
பொதுவாக மக்கள் அனைவரும் தங்கள் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்கிகளில் நிலையான வைப்புத் திட்டங்களைத் (Fixed Deposit) தேர்வு செய்வது வழக்கம்.
நிலையான வைப்பு என்பது பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகும். இது நிலையான வட்டி விகிதங்கள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி விலக்குகளுடன் பல்வேறு வட்டி செலுத்துதல் விருப்பங்கள், அதேபோல சந்தை தொடர்பான அபாயங்கள் இல்லாமல் உத்தரவாதம் அளிக்கிறது.
அதன் காரணமாக பலரும் வங்கியில் Fixed Deposit திட்டங்களில் பலரும் முதலீடு செய்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வங்கிக்கும் பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம் மாறும். அந்த வகையில் அதிக வட்டி எந்த வங்கியில் வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்.
👉 போஸ்ட் ஆபிஸ் FD Vs வங்கி FD இரண்டில் வட்டி எதில் அதிகம் தெரியுமா
வங்கி பெயர்கள் | General Citizens | Senior Citizens |
State Bank of India FD | 3.00% to 7.10% | 3.50% to 7.60% |
HDFC Bank FD | 3.00% to 7.10% | 3.50% to 7.75% |
ICICI Bank FD | 3.00% to 7.10% | 3.50% to 7.60% |
Indian Bank FD | 2.80% to 6.70% | 3.30% to 7.20% |
IDBI Bank FD | 3.00% to 7.15% | 3.50% to 7.65% |
Kotak Mahindra Bank FD | 2.75% to 7.20% | 3.25% to 7.70% |
RBL Bank FD | 3.50% to 7.80% | 4.00% to 8.30% |
Punjab National Bank FD | 3.50% to 7.25% | 4.00% to 7.75% |
Canara Bank FD | 3.25% to 7.15% | 3.25% to 7.65% |
Axis Bank FD | 3.50% to 7.20% | 3.50% to 7.95% |
Bank of Baroda FD | 3.00% to 7.05% | 3.50% to 7.55% |
IDFC First Bank FD | 3.50% to 7.75% | 4.00% to 8.25% |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |