டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு…!

Advertisement

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு தமிழ் | Abdul Kalam History in Tamil | அப்துல் கலாம் பற்றி எழுதுக

இந்தியாவின் தவப்புதல்வர்களில் ஒருவரான அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராகவும் இந்தியாவின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தவராகவும் திகழ்ந்தார். அதுமட்டுமில்லாமல்  இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவர், தலை சிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்திய ஏவுகணை நாயகன், சிறந்த பேச்சாளர், சிறந்த ஆசிரியர், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, மிகப்பெரிய பொருளாளர் என்று அனைவராலும் போற்றப்படும் எளிய மனிதர். மேலும் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அப்துல் கலாம் அவர்களின் வாழ்கை வரலாறு | About Abdul Kalam in Tamil:

அப்துல் காலமின் பிறப்பு:

abdul kalam biography in tamil

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் 15 ஆம் நாள் அன்று தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள  பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரத்தில் கலாம் அவர்கள் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஜைனுலாப்தீன், தாயார் பெயர் ஆஷியம்மா. இவர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

பள்ளி படிப்பு:

அப்துல் கலா ம், இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் பள்ளி படிப்பை தொடங்கினார். ஆனால் அவரது குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் அவர் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்தித்தாள் விநியோகம் செய்து வந்தார்.

APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எது தெரியுமா…?

கல்லூரி படிப்பு:

பள்ளி படிப்பை முடித்த பிறகு, திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். பிறகு 1954 ஆம் ஆண்டில் இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்றார். இயற்பியல் மீது அவருக்கு ஆர்வம் இல்லை என்பதால் அவர் சென்னையில் உள்ள எம்.ஐ.டி-யில் விண்வெளி பொறியல் படிப்பை படித்து அதே கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியான அப்துல் கலாம் அவர்கள்:

apj abdul kalam history in tamil

1960 ஆம் ஆண்டில் DRDO விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்தார். அதன் பின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் ISRO ஆராய்ச்சி பணிகளைத் தொடங்கிய அவர், துணைக்கோள் ஏவுகணை பிரிவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். பின்னர் 1980 ஆண்டு SLV III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி I என்ற செயற்கை கோளை விண்ணில் ஏவச்செய்து சாதனை படைத்தார். இது அவருக்கு மட்டுமில்லாமல் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாதனையாக இருந்தது.

பத்ம பூஷன் விருது:

இவரின் வியக்கத்தக்க செயலை பாராட்டி 1981 ஆம் ஆண்டு, மத்திய அரசு இவருக்கு  இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1999 ஆம் ஆண்டில் “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றி இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார். அப்துல் கலாம் அவர்கள் இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். இதனால் இவர் அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசு தலைவரான A.P.J அப்துல் கலாம்:

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

2002 ஆம் ஆண்டில் நடந்த குடியரசு தேர்தலில் வெற்றி பெற்று ஜுலை 25 ஆம் நாள்  இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். இவர் குடியரசு தலைவர் ஆகுவதற்கு முன்பே மத்திய அரசு இவருக்கு “பாரத ரத்னா” விருது வழங்கி சிறப்பித்தது. அதுமட்டுமில்லாமல் “பாரத ரத்னா” விருது வழங்கிய மூன்றாவது குடியரசு தலைவராகவும் விளங்கினார்.

மக்களின் ஜனாதிபதி:

2007 ஆம் ஆண்டு வரை மக்களின் குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம்  அவர்கள், அனைவராலும் “மக்களின் ஜனாதிபதி” என்று அன்போடு அழைக்கப்பட்டார். பிறகு 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசு தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம் பல்வேறு காரணங்களால் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்தார்.

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..!

அப்துல் கலாம் அவர்கள் பெற்ற விருதுகள்:

அப்துல் கலாம்

  1. 1981 – பத்ம பூஷன்
  2. 1990 – பத்ம விபூஷன்
  3. 1997 – பாரத ரத்னா
  4. 1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
  5. 1998 – வீர் சவர்கார் விருது
  6. 2000 – ராமானுஜன் விருது
  7. 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
  8. 2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
  9. 2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
  10. 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
  11. 2009 – ஹூவர் மெடல்
  12. 2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
  13. 2012 –  சட்டங்களின் டாக்டர்
  14. 2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது.

A.P.J அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அப்துல் கலாம் அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியுள்ளர்.

  •  அக்னி சிறகுகள்
  •  இந்தியா 2020
  •  எழுச்சி தீபங்கள்
  • அப்புறம் பிறந்தது ஒரு புதிய
  •  குழந்தை

அப்துல் கலாம் அவர்கள் இறுதி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். இவர் “இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்” என்று கூறி கனவு காணுங்கள் அந்த கனவு நினைவாகும் வரை பாடுபடுங்கள் என்ற பதிவை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தார். கலாம் அவர்கள் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும் மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

அப்துல் கலாம் அவர்களின் கடைசி நொடி:

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட்ஆஃப்  மேனேஜ்மென்ட் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார்.

இது போன்ற BIOGRAPHY பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Biography 

 

 

Advertisement