சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு | Sachin Tendulkar Biography in Tamil
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டு என்று இருக்கும். அதில் பெரும்பாலான நபர்களுக்கு இது நாள் வரையிலும் பிடித்த ஒரு விளையாட்டு என்றால் முதல் இடத்தில் கிரிக்கெட் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கிரிக்கெட் என்று சொன்னவுடன் முதலில் நியாபகம் வருவது என்றால் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் பற்றி தான். இவரை பற்றி நமக்கு தெரிந்தது என்றால் 10-ஆம் வகுப்பில் தோல்வி பெற்றுள்ளார் மற்றும் கிரிக்கெட்டில் பெரிய ஆட்டக்காரர் அவ்வளவு தான். அதனால் இன்று நமது பொதுநலம். காம் பதிவில் சச்சின் டெண்டுல்கர் பற்றிய முழு தகவலையும் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
Sachin Tendulkar Biography:
சச்சின் டெண்டுல்கர் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ரமேஷ் மற்றும் தாய் பெயர் ரஞ்சனி ஆகும். இவர் மிகவும் புகழ்பெற்ற எழுத்த்தளர் மற்றும் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இவரது குடும்பத்தில் மொத்தம் இவரை சேர்த்து 4 பிள்ளைகள் வளர்ந்து வந்தன. ஆனால் சச்சினிற்கு இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஒரு தனி ஆர்வம் இருந்து வந்தது.
அதனை தெரிந்துக்கொண்ட அவர் தந்தை சச்சினை ரமாகாந்த் அச்ரேகரிடம் என்பரிடம் சசினை கிரிகெட் கற்றுத்தருமாறு பயிற்சிக்கு சேர்த்து விட்டார்.
சச்சினிற்கு இளம் வயதில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததால் அதனை மிகவும் ஆர்வத்துடன் விரைவாக கற்றுக்கொண்டு கோஜாகான் என்ற உயர்நிலை பள்ளி அணிக்கு எதிராக 1984-ஆம் ஆண்டு கிரிக்கெட் ஆட தொடங்கினார். இதுவே சச்சினின் முதல் கிரிக்கெட் ஆட்டம் ஆகும்.
இதனை தொடர்ந்து சச்சின் அஞ்சலி என்ற பெண்ணை மனம் முடித்தார்.
கவிஞர் தாமரை வரலாறு |
கிரிக்கெட் சாதனை:
ரஞ்சித் கோப்பை போட்டி என்ற கிரிக்கெட் விளையாட்டிற்கு முதல் முதலில் இந்தியாவில் இருந்து சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கிலாந்து சென்றார். அங்கும் எதிர் அணியை தோற்கடித்து 1988-ல் வெற்றி பெற்றார்.
அதுமட்டும் இல்லாமல் அந்த போட்டியின் மூலமாக இளம் வயதில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இந்தியாவிற்கு சேர்த்த சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
ஆனால் சச்சின் 1989-ஆம் ஆண்டு தான் இந்திய அணியால் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பெருமை அளிக்கும் விதமாக இந்தியா, பாகிஸ்தான் தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் 50 ரன்கள் அவர் மட்டுமே எடுத்து பாகிஸ்தானை தோல்வியுற செய்தார். இதுவே சச்சினின் முதல் சாதனையாக கூறப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை சச்சின் 15,921 ரன்களை 200 டெஸ்ட் போட்டிகளிலும் மற்றும் 18,426 ரன்களை ஒருநாள் போட்டியிலும் பெற்று பெரிய சாதனை படித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் 100 ரன்களை ஒரே ஆட்டத்தில் பெற்று உலகளவில் சாதனை படித்துள்ளார். இவருடைய சாதனை இன்றளவும் பேசப்படுகிறது.காமராஜர் வாழ்க்கை வரலாறு |
சச்சின் டெண்டுல்கர் விருதுகள்:
- ராஜீவ் காந்தி கோல் ரத்னா விருது
- பாரத ரத்னா விருது
- பத்ம ஸ்ரீ விருது
- அருச்சுனா விருது
- பத்ம விபூஷண் விருது
- லாரஸ் உலக விளையாட்டு விருது
மேலே சொல்லப்பட்டுள்ள விருதுகள் அனைத்தும் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் பெற்றதாகும்.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு:
சச்சின் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து 2013-ல் அக்டோபர் மாதத்தில் சர்வேதேச அளவிலான கிரிக்கெட் போட்டியிலும் மற்றும் நவம்பர் மாதத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட்டில் இவ்வளவு சாதனைகள் சச்சின் டெண்டுல்கர் இடத்திற்கு மற்றொவருவர் இது நாள் வரவில்லை என்பது மிகவும் பெருமைக்குரிய ஒரு செய்தியாகும்.
இது போன்ற BIOGRAPHY பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Biography |