வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கவிஞர் வாலி பற்றிய சில குறிப்பு..!

Updated On: August 11, 2023 12:59 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Vaali Biography in Tamil

நமது பொதுநலம்.காம் பதிவின் தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கவிஞர் வாலி அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி தான் தெரிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கவிஞர் வாலியின் பிறப்பு, இயற்பெயர், அவர் பெற்ற விருதுகள் மற்றும் அவர் படைத்த படைப்புகள் போன்ற தகவல்களை அறிந்துக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படியுங்கள்=> தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் பற்றிய தகவல்

Vaali Life History in Tamil:

Vaali Life History in Tamil

கவிஞர் வாலி 29 அக்டோபர் 1931-ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரின் இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன் ஆகும். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, ‘வாலி’ என்ற பெயரைச் சூட்டினார்.

இவர் ஒரு தலை சிறந்த தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதை தொகுப்புகள் புகழ் பெற்றவை.

எழுதிய நூல்கள்:

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘நிஜ கோவிந்தம்’, ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ண விஜயம்’ மற்றும் ‘அவதார புருஷன்’.

இவரது 80-வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், ‘வாலி 1000’ என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்=> முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்

எழுதிய திரைப்பாடல்கள்:

இவர் 1958 -ஆம் ஆண்டு அழகர்மலை கள்வன் என்ற திரைப்படத்திற்காக எழுதிய நிலவும் தாரையும் நீயம்மா, இந்த உலகம் ஒரு நாள் உனதம்மா ஆகிய பாடல்களே இவர் எழுதிய முதல் திரைப்பாடல்கள் ஆகும்.

இவர் அதன் பிறகு 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரையிசைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

திரைக்கதை வசனம்: 

  1. 1974- கலியுகக் கண்ணன்
  2. 1975- காரோட்டிக்கண்ணன்
  3. 1976- ஒரு கொடியில் இரு மலர்கள்
  4. 1978- சிட்டுக்குருவி
  5. 1979- கடவுள் அமைத்த மேடை
  6. 1983- “சாட்டை இல்லாத பம்பரம்” (வசனம்)
  7. 1989- ஒரே ஒரு கிராமத்திலே

போன்ற திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்=> குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்

விருதுகள்:

  1. பத்மஸ்ரீ விருது-2007
  2. 1973-ல் ‘இந்திய நாடு என் வீடு’.. என்ற ‘பாரத விலாஸ்’ திரைப்படத்தின் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.

வாலி ஐந்துமுறை (கீழே காணப்படும் திரைப்படங்களின்) சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்

  1. 1970 – எங்கள் தங்கம் 
  2. 1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
  3. 1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள்
  4. 1990 – கேளடி கண்மணி
  5. 2008 – தசாவதாரம்

தமிழக அரசின் பிற விருதுகள்:

  1. 2000 – மகாகவி பாரதியார் விருது

மறைவு:

வாலி மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, 2013 ஜூன்  7 அன்று, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அவர் 2013 ஜூன்  18 அன்று காலமானார்.

இதையும் படியுங்கள்=> தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதையை எழுதிய நாஞ்சில் நாடன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now